direct tax: நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வருவாய் ஏப்ரல்-ஜூலையில் 40 % அதிகரிப்பு

By Pothy Raj  |  First Published Aug 16, 2022, 9:34 AM IST

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் நேரடி வரி வருவாய் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.


நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான மாதங்களில் நேரடி வரி வருவாய் 40 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரியவந்துள்ளது.

கார்ப்பரேட் வரியைவிட தனிநபர் வருமானவரி அதிகரித்துள்ளது என்று லைவ்மின்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியாவின் வாரன் பபெட்.. இந்த விஷயத்தில் கில்லியாக அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா யார்?

ஒட்டுமொத்த நேரடி வரிவருவாய், ரீபண்ட், கார்ப்பரேட்மற்றும் வருமானவரி ஆகியவை நடப்புநிதியாண்டின் முதல் 4 மாதங்களில் 40 சதவீதம் அதிகரித்து, ரூ.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நேரடி வரி ரீபண்ட் அளிப்பு 38 சதவீதம் உயர்ந்து, ரூ.67ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனங்களின் வருமானத்துக்கான வருமானவரி நடப்பு நிதியாண்டில் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. எளிமையான வரிவிதிப்பு, வரிவசூல் ஆகியவற்றால்தான் வரிவசூல் அதிகரித்துள்ளது என்று வருமானவரித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

வருமானவரித்துறை சார்பில் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் “ நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான கார்ப்பரேட் வரி வீதம் என்பது கடந்த 2019ம் ஆண்டு நிறுவனங்களின் வரியைக் குறைத்ததால் எழுந்த விமர்சனத்துக்கு பதிலாக அமைந்து வருவாய் அதிகரித்துள்ளது. 

இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தா வேணுமா? ரிலையன்ஸ் ஜியோ அறிவித்த சூப்பர் திட்டத்தில் சேருங்க

கார்ப்பரேட் வரி வசூல் 2021-22ம்ஆண்டில் ரூ.7.23 லட்சம் கோடியாகும், இது அதற்கு முந்தைய நிதியாண்டைவிட 58 சதவீதம் அதிகமாகும். 2022-23ம் நிதியாண்டில் கார்ப்பரேட் வரி வசூல், கடந்த நிதியாண்டைவிட 34 சதவீதம் அதிகரிக்கும்” எனத் தெரிவித்துள்ளது.

தனிநபர் வருமானவரி கடந்த ஆண்டைவிட 52 சதவீதம் அதிகரி்த்து, ரூ.2.67 லட்சம் கோடியாகவும், கார்ப்பரேட் வரி ரூ.45ஆயிரம் கோடியாகவும் அதிகரி்த்துள்ளது. அமலாக்கப்பிரிவின் கண்காணிப்பு, நவீன தொழில்நுட்பம், ஆண்டு தகவல் அறிக்கை(ஏஎஸ்ஐ) ஆகியவை மூலம் கண்காணிக்கப்படுவதால், வரி வசூல் அதிகரித்துள்ளது. 

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பவுடர் விற்பனையை நிறுத்துகிறது

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பமான ஏஎன்ஐ மூலம் ஒருவர் ஆண்டுக்கு எவ்வளவு தொகை பரிமாற்றம் செய்கிறார் என்பதைக் கண்டறிந்து, அதன் மூலம் வருமானவரி செலுத்தக் கூறலாம்.

ஏப்ரல்-ஜூலையில் சுய மதிப்பீடு வரி 275 சதவீதம் அதிகரித்து ரூ.43,500 கோடியாகவும், தனிநபர் வருமானவரி 38 சதவீதமும் உயர்ந்துள்ளது. கார்ப்பரேட் வரி 32 சதவீதம் உயர்ந்து, ரூ.2.20 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.

click me!