சென்னை உள்பட நாட்டின் 8 நகரங்களில் வீடுகளின் விலை உயர்வு; இதுதான் காரணம்!!

By Dhanalakshmi GFirst Published Aug 16, 2022, 4:01 PM IST
Highlights

சென்னை, பெங்களூரு, அகமதாபாத் உள்பட நாட்டின் 8 நகரங்களில் குடியிருப்புகளுக்கான வீடுகளின் தேவை அதிகரித்து, விலையும் 5 சதவீதம் முதல்  அதிகரித்துள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வும் இதற்குக் காரணமாகிறது.

டெல்லி-என்சிஆர், எம்எம்ஆர், கொல்கத்தா, புனே, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு, அகமதாபாத் ஆகிய 8 நகரங்களில் குடியிருப்புகளுக்கான வீடுகளின் தேவை அதிகரித்து, விலையும் 5 சதவீதம் முதல்  அதிகரித்துள்ளது. ஆனால், விற்கப்படாமல் இருந்த வீடுகள், 2021-2022 ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், சிறிய அளவில் விற்பனை அடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

தொற்றுநோய்க்கு முந்தைய கால கட்டத்தை விட குடியிருப்புக்கான வீடுகளின் விலை அதிகரித்துள்ளது. இதற்கு மற்றொரு காரணம் கட்டுமானப் பொருட்களின் விலைகளும் உயர்ந்து இருப்பதுதான். டெல்லி-என்சிஆர் குடியிருப்பு வீடுகளின் விலை முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில 10%  உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து அகமதாபாத், ஹைதராபாத் ஆகிய நகரங்கள் முறையே 9% மற்றும் 8% விலை உயர்ந்துள்ளது.

எஸ்பிஐ வங்கியின் சிறப்பு வைப்புத் திட்ட வட்டி உயர்வு அறிவிப்பு; மூத்த குடிமக்களுக்கு சிறப்பு சலுகை!!

கடந்த ஆண்டின் இறுதியில் குடியிருப்பு வீடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இது நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டிலும் தொடருகிறது. வீடுகளுக்கான தேவை அதிகரித்தபோதும், புதிய ஹவுசிங் திட்டங்கள் வெளியானபோதும், சில நகரங்களில் பழைய ஹவுசிங் திட்டங்களில் துவங்கப்பட்டு விற்கப்படாத வீடுகளின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. 

பெங்களூருவில் அதிகளவில் வீடுகள் விற்றுள்ளன. ஆனாலும், கட்டப்பட்டு விற்கப்படாமல் இருந்த வீடுகள் விற்பனையில் 21% தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத், எம்எம்ஆர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் சில புதிய குடியிருப்பு வீடுகள் விற்பனைக்கு வந்து இருந்தாலும், இந்த நகரங்களில் புதிதாக கட்டப்பட்டு விற்காமல் இருந்த வீடுகள் தற்போது விற்று வருகின்றன. இருந்தபோதும், எம்எம்ஆரில் இன்னும் 36% வீடுகள் விற்கப்படாமல் உள்ளன. டெல்லி- என்சிஆர்-ல் 14% வீடுகளும், புனேவில் 13% வீடுகளும் இன்னும் விற்கப்படாமல் உள்ளன. 

"பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ விகிதங்களை அதிகரித்து வருகிறது. இத்துடன், வீட்டுக் கடனுக்கான வட்டியை வங்கிகள் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான கூலி அதிகரித்து வருவதால் நகரங்களில் வீடுகளின் விலை 5% வரை அதிகரித்துள்ளது. சென்னையில் 5% வரை அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

adani group: adani ports: அதானி குழுமம், ரூ.835 கோடிக்கு நவ்கரின் கன்டெய்னர் டெப்போவை விலைக்கு வாங்குகிறது

வீடுகளின் விலை மற்றும் வட்டி விகிதம் அதிகரிப்பதால், வீடுகள் வாங்குவது நாடு முழுவதும் மற்ற நகரங்களில் குறைந்து இருந்தாலும், வரும் நாட்களில் பண்டிகைகள் வருவதால், இதை முன்னிட்டு அதிகளவில் வீடுகள் விற்கப்படலாம் என்ற நம்பிக்கையை கட்டுமான நிறுவனத்தினர் தெரிவித்து வருகின்றனர். 

click me!