தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஊசலாட்டத்துடன் நகர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று சற்று குறைந்தநிலையில் இன்று அதிகரித்துள்ளது.
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக ஊசலாட்டத்துடன் நகர்ந்து வருகிறது. தங்கம் விலை நேற்று சற்று குறைந்தநிலையில் இன்று அதிகரித்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 5ரூபாயும், சவரனுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,835 ஆகவும், சவரன், ரூ.38,680 ஆகவும் இருந்தது.
தணிந்தது தங்கம் விலை! நகைப்பிரியர்களுக்கு சற்று ஆறுதல்: இன்றைய நிலவரம் என்ன?
இந்நிலையில் சனிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 5ரூபாய் உயர்ந்து, ரூ.4,840ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.40 அதிகரித்து, ரூ.38,720ஆக நிலை கொண்டுள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,840ஆக விற்கப்படுகிறது.
மக்களே தங்கம் இப்போது வாங்கலாமா..? சற்று விலை உயர்வு.. இன்றைய விலை நிலவரம்..
தங்கம் விலை கடந்த 4 நாட்களாக கடும் ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. கடந்த 5ம் தேதி முதல் இன்று வரை தங்கம் கிராம் ரூ.4,835 முதல் ரூ.4.840க்குள்ளாகவே இருக்கிறது. 5 ரூபாய் உயர்விலும், 5 ரூபாய் குறைந்துமே விலை சென்று வருகிறது.
தங்கம் விலை வாரம் தொடங்கியதிலிருந்தே உயரத் தொடங்கியது. இந்த வாரத்தில் மட்டும் சவரனுக்கு ரூ.1080 அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் நீண்ட காலத்துக்குப்பின், தங்கம் சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் அதிகரித்தது.
பிச்சுகிட்டு போகுது! தங்கம் விலை 2 நாளில் சவரனுக்கு ரூ.1000க்கு மேல் உயர்வு: இன்றைய நிலவரம்?
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.66.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 சரிந்து, ரூ.66,000 ஆகவும் விற்கப்படுகிறது