facebook and layoff: meta: 12 ஆயிரம் ஊழியர்களின் வேலை பறிபோகிறது: 15% ஆட்குறைப்பு செய்ய ஃபேஸ்புக் முடிவு

By Pothy RajFirst Published Oct 7, 2022, 11:18 AM IST
Highlights

மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்குள் 15 சதவீதம் பேரை அதாவது 12 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க மெட்டா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

மெட்டா நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களை ஆட் குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்குள் 15 சதவீதம் பேரை அதாவது 12 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்க மெட்டா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன


இதன்படி ஃபேஸ்புக் நிறுவனத்தில் சிறப்பாகப் பணியாற்றாத ஊழியர்களைக் கண்டுபிடித்து வேலையிலிருந்து நீக்கும் நடவடிக்கையில், மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன

செல்லப் பிராணிகளையும் விமானத்தில் பயணிகள் அழைத்துச் செல்லலாம்! அகாசா ஏர் நிறுவனம் அனுமதி


அடுத்த சில வாரங்களில் 15 சதவீதம் ஊழியர்கள் அதாவது 12 ஆயிரம் ஊழியர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்படலாம். வேறுவழியில்லாததால் வலுக்கட்டாயமாக இந்த முடிவை ஃபேஸ்புக் நிறுவனம் எடுக்கிறது என்று ஃபேஸ்புக் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிதியாண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்திவைப்பதாக ஏற்கெனவே மெட்டா நிறுவனம் தெரிவித்த நிலையில் இப்போது ஆட்குறைப்பும் செய்ய உள்ளது. 

அன்லிமிடட் டேட்டா! இன்று முதல் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை: 4 நகரங்களில் பீட்டா பரிசோதனை தொடக்கம்
உச்ச கட்டமாக மெட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 380 டாலராக இருந்தது. கடந்த ஆண்டு பங்குமதிப்பு 60 சதவீதம் குறைந்துள்ளது. 


மெட்டா நிறுவன நிறுவனர் மற்றும் சிஇஓ மார்க் ஜூகர்பெர்க் சமீபத்தில் ஊழியர்களுடான சந்திப்பின்போது கூறுகையில் “ எங்கள் நிறுவனம் புதிதாக பணிக்கு ஆட்களை எடுப்பதை நிறுத்திவைத்துள்ளது. அதேநேரம், அதிகமான ஊழியர்களை நீக்கும் நடவடிக்கையும் நடந்து வருகிறது” எனத் தெரிவித்தார்


கடந்த ஆண்டு மெட்டா ஆண்டுக் கூட்டத்தில் பேசிய ஜூகர்பெர்க் “ அடுத்த ஆண்டில் இருந்து படிப்படியாக ஊழியர்களைக் குறைக்க இருக்கிறோம்.  பல அணிகளில் உள்ள ஊழியர்கள் குறைக்கப்பட்டு, அணி சுருங்கப்போகிறது, எங்கள் சக்தியை வேறுபல புதிய விஷங்களுக்கு திருப்ப இருக்கிறோம. மெட்டாவின் பல்வேறு துறைகளுக்கு புதிதாக ஆட்களை எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளோம்” எனத் தெரிவித்தார்

சர்வதேச கச்சா எண்ணெய் விலை 30 % சரிந்தும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு இல்லை !
அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலைக்கான அறிகுறிகள் இருப்பதால், செலவைக் குறைக்கும் முயற்சியில் மெட்டா நிறுவனம் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைக்கிறது. சிலருக்கு 30 முதல் 60 நாட்கள் வரை காத்திருப்பு பட்டியலில் வைக்கலாம் அல்லது நிறுவனத்திலிருந்து வெளியேற்றலாம். 


அதுமட்டுமல்லாமல் காத்திருப்பு பட்டியலில் உள்ள ஊழியர்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் உள்நாட்டில் வேறுபணியை தேடிக்கொள்ள வேண்டும். அவ்வாறு தவறும்பட்சத்தில் அடுத்ததாக பணிநீக்கம் செய்யப்படுவார்கள். இதை மெட்டா நிறுவனம் கொள்கையாக வைத்துள்ளது. மெட்டா நிறுவனம் ஆட்குறைப்பு செய்வதோடு மட்டுமல்லாமல், புதிதாக ஆட்களை பணிக்கு எடுக்கும் நடவடிக்கையையும் நிறுத்தியிருக்கிறது.


உலகஅரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள உறுதியற்றதன்மை காரணமாகவும், உலகப் பொருளாதார மந்தநிலை காரணமாகவும், மெட்டா, கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களின் வேலையாட்களை குறைத்து, அதன்  மூலம் செலவைக் குறைத்து வருகின்றன. ஜூலை மாதம் வரை அமெரிக்காவில் 32 ஆயிரம் ஊழியர்கள் தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!