Share Market Today: பாதாளத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 500 புள்ளிகள் வீழ்ச்சி, நிப்டிக்கு அடி!

By Pothy RajFirst Published Nov 21, 2022, 9:54 AM IST
Highlights

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் படுவீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 450புள்ளிகளுக்கு மேல் குறைந்தன, நிப்டியும் அடிவாங்கியது.

வாரத்தின் முதல்நாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் படுவீழ்ச்சியுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 450புள்ளிகளுக்கு மேல் குறைந்தன, நிப்டியும் அடிவாங்கியது.
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக சரிவை நோக்கி பயணிக்கின்றன. 

காரணம் என்ன

சர்வதேச காரணிகள் பதற்றமாக இருப்பதுதான்தாக்கம் இந்தியப் பங்குச்சந்தையிலும் எதிரொலிக்கிறது. அமெரிக்காவில் பணவீக்கத்தைக் குறைக்கும் தீர்மானத்துடன் பெடல் வங்கி இருக்கிறது, இந்த வாரத்தில் நடக்கும் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில், வட்டிவீதம் எவ்வளவு உயர்த்தப்படும் என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெடரல் ரிசர்வ் அறிவிப்பைப் பொறுத்து, அமெரிக்க பங்குப்பத்திரங்கள், கடன்பத்திரங்கள் மதிப்பு மாறுபடும்.

அது தவிர பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 85 டாலராக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமான போக்கு என்றாலும், உலகளவில் பொருளாதார மந்தநிலை வருகிறதா என்ற அச்சத்தை முதலீட்டாளர்கள்மத்தியில் ஏற்படுத்துகிறது. 

கரடியிடம் சிக்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி சரிவு: பேடிஎம் பங்கு 11% வீழ்ச்சி

மேலும், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சீனாவில் கடுமையான லாக்டவுன் கொண்டுவரப்பட்டால் பொருளாதாரம் முடங்கும், ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கும் என்று முதலீட்டாளர்கள் அஞ்சுகிறார்கள்.

இருப்பினும் ஆசியப் பங்குச்சந்தையில் சிங்கப்பூர், ஜப்பான் பங்குச்சந்தைகள் உயர்வுடன் சென்றன, மற்ற நாடுகளின் பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் உள்ளன.

சரிவு

இந்தியப் பங்குச்சந்தையிலும் காலை வர்த்தகம் தொடங்கியதுடன் மும்பை ப ங்குச்சந்தையில் சென்செக்ஸ் 290 புள்ளிகள் குறைந்தது. அதன்பின்பும் சரிவு தடுக்க முடியவில்லை. தொடர்ந்து நிப்டியும், சென்செக்ஸும் சரிவில் பயணிக்கின்றன.

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 510 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 61,153 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 149 புள்ளிகள் குறைந்து, 18,158 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்துகிறது.

2வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு: PSU பங்குகள் லாபம்

முக்கிய பங்குகள்

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் டாடா ஸ்டீல், பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, பவர்கிரிட், லார்சன் அன்ட்டூப்ரோ, இன்டஸ்இன்ட் வங்கி ஆகிய பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன. மற்ற நிறுவனப்பங்குகள் அனைத்தும் சரிவை நோக்கி உள்ளன.

நிப்டியில் அனைத்து துறைகளும் சரிவில் உள்ளன. குறிப்பாக வங்கித்துறை, நிதித்துறை, உலோகம், மருந்துத்துறை, பொதுத்துறை வங்கிப் பங்குகள் மோசமான சரிவில் உள்ளன.

கடும் சரிவு

குறிப்பாக பிஎஸ்இ-யில் தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 0.97 சதவீதமும், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை 1.42 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளன. எரிசக்தி துறை பங்குகள் 1.06 சதவீதமும், ரியல்எஸ்டேட் துறை பங்குகள் 0.54 சதவீதமும் சரிந்துள்ளன. 

கடும் ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி சரிவு: பொதுத்துறை பங்குகள் ஜோர்

ஜோமேட்டோ

ஜோமேட்டோ நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான மோகித் குப்தா நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளார். பெயர் வெளியிடாத ஒரு நிறுவனத்தில் மோகித் குப்தா சேர இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. இதனால் வர்த்தகம் தொடங்கியவுடன் ஜோமேட்டோ பங்கு மதிப்பு 2 சதவீதம்சரிந்தது


 

click me!