இந்தியாவிலேயே மிக நீண்ட கி.மீ தொலைவு பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்துக்கு இரு நாட்கள் இயக்க வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே முடிவு செய்துள்ளது.
இந்தியாவிலேயே மிக நீண்ட கி.மீ தொலைவு பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலை வாரத்துக்கு இரு நாட்கள் இயக்க வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே முடிவு செய்துள்ளது.
நாட்டிலேயே அதிகமான தொலைவு பயணிக்கும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரிக்கும், அசாம் மாநிலத்துக்கும் செல்கிறது. இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 2011ம் ஆண்டு, நவம்பர் 19ம் தேதி தொடங்கப்பட்டது.
உருக்கு, இரும்பு தாது ஏற்றுமதி வரி ரத்து! சில பொருட்கள் இறக்குமதிக்கு வரிஉயர்வு
இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு 9 மாநிலங்களைக் கடந்து, 80 மணிநேரம் பயணித்து, 4 ஆயிரத்து 189 கிமீ. தொலைவைக் கடக்கிறது. இந்த ரயில்தான் நாட்டின் மிக நீண்ட தொலைவு பயணிக்கும் ரயிலாகும்.
இந்தரயில் கன்னியாகுமரியில் இருந்தும், அசாம் மாநிலம் திப்ருகார் நகரில் இருந்தும் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இனிமேல் வாரத்துக்கு இரு நாட்கள் இயக்கப்படும் என்று வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே தெரிவித்துள்ளது.
வாரத்துக்கு இருநாட்கள் இயக்கப்படும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில்வே சேவை நவம்பர் 22ம் தேதியிலிருந்து தொடங்கும். ரயில்எண் 15905(திப்ருகார்-கன்னியாகுமரி) விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது வாரத்தில் சனிக்கிழமை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இனிமேல் கூடுதலாக ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் இயக்கப்படும்
தங்கம் விலை ஊசலாட்டம்! சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?
கன்னியாகுமரியிலிருந்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் திப்ருகார் செல்லும் ரயில் எண் 15905 விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், இனிமேல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வரும் 27ம் தேதி முதல் இயக்கப்படும்.
இவ்வாறு வடகிழக்கு எல்லைப்புற ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.