Steel Export Duty Cut: உருக்கு, இரும்பு தாது ஏற்றுமதி வரி ரத்து! சில பொருட்கள் இறக்குமதிக்கு வரிஉயர்வு

By Pothy Raj  |  First Published Nov 19, 2022, 5:27 PM IST

உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையிலும் உருக்கு, இரும்புத் தாது ஏற்றுமதிக்கான வரி ரத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.


உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும், ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையிலும் உருக்கு, இரும்புத் தாது ஏற்றுமதிக்கான வரி ரத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம், கச்சா உருக்கு தொழிற்சாலையில் பயன்படும் அந்தார்சைட், கோக்நிலக்கரி, பெரான்நிக்கல் உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

தங்கம் விலை ஊசலாட்டம்! சவரனுக்கு 400 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?

6 மாத இடைவெளிக்குப்பின், ஏற்றுமதி வரியில் தள்ளுபடி மற்றும் இறக்குமதி வரி ஆகியவை மீண்டும் வந்துள்ளது. கடந்தமே மாதத்தில் உருக்குப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்தது, உருக்குப் பொருட்களுக்கான கச்சா பொருட்கள் தட்டுப்பாட்டால் திடீரென விலை அதிகரித்தது. இதையடுத்து,உருக்கு கச்சா  பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைத்தது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஏற்றுமதி செய்யப்படும் பிக்அயர்ன், உருக்குப் பொருட்கள், உருக்கு மூலப்பொருட்கள், பெல்லட்ஆகியவற்றுக்கு ஏற்றுமதி வரி முற்றிலும் நீக்கப்படும். உருக்கு மூலப்பபொருட்கள், உருக்குப் பொருட்கள் 58 சதவீதத்துக்கும் பணி முடித்திருந்தால் அவற்றுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

2வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ், நிப்டி சரிவு: PSU பங்குகள் லாபம்

ஒருவேளை உருக்குப் பொருட்கள் பணி முடிக்கப்பட்ட சதவீதம் 58 சதவீதத்துக்கு அதிகமாக இருந்தால், அதற்கு 30 சதவீதம் ஏற்றுமதி வரி விதிக்கப்படும். 

அந்தார்சைட், கோக்கிங் கோல், பெரோநிக்கல் ஆகியவர்றுக்கான இறக்குமதி 2.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு முன் கோக், செமி கோக் ஆகியவற்றுக்கு வரிவிலக்கு அளி்க்கப்பட்டிருந்தது, தற்போது 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

click me!