வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் முடிந்தது. மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.
வார வர்த்தகத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் முடிந்தது. மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன.
இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து 2வது நாளாக சரிவு காணப்படுகிறது.
சர்வதேச காரணிகள், அமெரிக்க பெடரல் வங்கித் தலைவரின் பேட்டி, சீனாவில் குறையாத கொரோனா பரவல் ஆகியவைதான் இந்தியப் பங்குச்சந்தையில் சரிவுக்கான காரணமாகும்.
கடும் ஊசலாட்டத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ், நிப்டி சரிவு: பொதுத்துறை பங்குகள் ஜோர்
அமெரிக்காவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி கடுமையாக வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பெடரல் ரிசர்வ் அதிகாரிகள் தெரிவித்தாலும், உறுதியான அறிவிப்பு ஏதும் இல்லை.
ஆனால் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜேம்ஸ் புல்லார்ட் அளித்தபேட்டியில் அமெரி்க்காவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 5 சதவீதத்திலிருந்து 7 சவீதம்வரை வட்டியை உயர்த்துவது அவசியம் என்று தெரிவித்தார். இந்த அறிவிப்பு சர்வதேச சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்தியச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 150 புள்ளிகள் உயர்ந்து, ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கினாலும், சிறிது நேரத்தில் புள்ளிகள் சரியத் தொடங்கின. நண்பகலில் 300 புள்ளிகளுக்கு மேல்சரிந்து பங்குச்சந்தை தள்ளாடியது.
சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: வீழ்ச்சியில் சென்செக்ஸ், நிப்டி: பேடிஎம் பங்கு 9% சரிவு
ஆனால், பிற்பகல் வர்த்தகத்தில் பங்குச்சந்தையில்வர்த்தகம் சூடிபிடிக்கத் தொடங்கியது. சரிவிலிருந்து பங்குச்சந்தை மெதுவாக மீளத் தொடங்கியது. இருப்பினும் வர்தத்கம் முடிவில் மும்பை, தேசியப் பங்குச்சந்தை சரிவில்தான் முடிந்தன.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 87 புள்ளிகள் குறைந்து, 61,663 ஆகவும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 36 புள்ளிகள் சரிந்து 18,307 ஆகவும் நிலைபெற்றது.
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள முக்கிய 30 நிறுவனப் பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. குறிப்பாக ஏசியன்பெயின்ட்ஸ், இந்துஸ்தான் லீவர், ஆக்சிஸ் வங்கி, டெக்மகிந்திரா, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் லாபத்தில் முடிந்தன
பங்குச்சந்தையில் சுணக்கம்! சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் வீழ்ச்சி: வாகனப் பங்கு ஏற்றம்
நிப்டியில் பொதுத்துறை பங்குகள் 1.53 சதவீதம் லாபமடைந்தன. மற்ற துறைப் பங்குகளான நுகர்வோர் துறை, தகவல்தொழில்நுட்பம்,மருந்துத்துறை உள்ளிட்ட பங்குகள் சரிவில் முடிந்தன