தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராமுக்கு 26 ரூபாயும், சவரனுக்கு 208 ரூபாயும் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,951 ஆகவும், சவரன், ரூ.39,608 ஆகவும் இருந்தது.
ஏற்றத்தில் தங்கம் விலை! 3 நாட்களில் ரூ.500க்கு மேல் உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(சனிக்கிழமை) கிராமுக்கு 26 ரூபாய் சரிந்து ரூ.4,925 ஆகவும், சவரனுக்கு 208 ரூபாய் வீழ்ச்சி அடைந்து, ரூ.39 ஆயிரத்து 400 ஆகவும் குறைந்துள்ளது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,925க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை 5 நாட்களுக்குப்பின் சரிவு! நடுத்தரக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சி! நிலவரம் என்ன?
தங்கம் விலை கடும் ஊசலாட்டத்தில் இருந்து வருகிறது. கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை உயர்ந்தது, இந்த வாரத்தின் தொடக்கத்திலும் உயர்ந்தநிலையில் கடந்த 3 நாட்களாகச் சரிந்து வருகிறது.
இதனால் தங்க நகை வாங்குவோர் தொடர்ந்து விலை குறையுமா அல்லது இதே விலையில் நீடிக்குமா அல்லது அதிகரிக்குமா என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த கடந்த 10 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.840 அதிகரித்துள்ளது. ஆனால், கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.400க்கு குறைந்துள்ளது.
தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! 2 நாளில் 200 ரூபாய் குறைந்தது! நிலவரம் என்ன?
சர்வதேச அளவில் ஏற்பட்டும் பதற்றமான சூழல், உக்ரைன் ரஷ்யா போர் மீண்டும் மூளுமா, பெடரல் வங்கியின் அறிவிப்பு போன்ற சர்வதேச காரணிகளால் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம் உயர்வு குறித்த அறிவிப்பு, சீனாவில் அதிகரி்த்துவரும் கொரோனா பரவல் போன்றவை தங்கத்தின் விலையில் வரும் நாட்களில்தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
வெள்ளி விலை இன்று சற்று அதிகரித்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.67.00 ஆக இருந்தநிலையில் 50 பைசா உயர்ந்து, ரூ.67.50ஆகவும், கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து, ரூ.67,500 ஆக உயர்ந்துள்ளது.