TMB Bank:தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு பச்சைக் கொடி! தடையை நீக்கியது ரிசர்வ் வங்கி

By Pothy RajFirst Published Oct 22, 2022, 3:52 PM IST
Highlights

101 ஆண்டுகால பழமையான, பாரம்பரிய வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிதாக கிளை தொடங்க 3 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கிவிட்டதாக அந்த வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

101 ஆண்டுகால பழமையான, பாரம்பரிய வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிதாக கிளை தொடங்க 3 ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கிவிட்டதாக அந்த வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இந்த உத்தரவு 21ம்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் 15ம் தேதி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில் இந்த தகவலை அந்த வங்கி பங்குச்சந்தைக்கு தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிப் பங்குகளை 3 மடங்கு வாங்கிய சில்லரை முதலீட்டாளர்கள்

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி புதிய கிளையைத் தொடங்க வேண்டுமானால் குறிப்பிட்ட அளவு டெபாசிட் தொகையை, முதலீட்டை கைவசம் வைத்திருக்க வேண்டும். ஆனால், இல்லை என்பதால் புதிய கிளை தொடங்க தடை விதித்து ரிசர்வ்வங்கி கடந்த 2019ம் ஆண்டுஉத்தரவிட்டது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் சிஇஓ-வாக சங்கரசுப்பிரமணியம் பொறுப்பேற்பு

ஆனால், சமீபத்தில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி ஐபிஓ வெளியிட்டு தேவையான முதலீடு வந்துள்ளதையடுத்து, இந்த தடையை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கிக்கு தற்போது நகர்புறங்கள், கிராமப்புறங்கள் சேர்த்து 509 கிளைகள் உள்ளன. இதில் கிராமப்புறங்களில் 106, பகுதிநகரங்களில் 247 கிளைகள், நகர்புறங்களில் 80 கிளைகள், மெட்ரோநகரங்களில் 76கிளைகள் உள்ளன.

2022ம் நிதியாண்டு அறிக்கையி்ல் டிஎம்பி வங்கியின் மொத்த அட்வான்ஸ் 8சதவீதம் அதிகரித்து ரூ.33,491 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் சில்லறை வர்த்தகம், வேளாண்மை, சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் கடன் வழங்கியுள்ளது. மார்ச் 31ம் தேதி நிலவரப்படி டிஎம்பி வங்கியில், ரூ.44,933.10 கோடி டெபாசிட் உள்ளது, இது 9.7 சதவீதம் முந்தைய ஆண்டைவிட அதிகமாகும்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி IPO வரும் செப் 5ல் வெளியீடு: பங்கு விலையை தெரிஞ்சுங்கோங்க!

அடுத்த 18 முதல் 24 மாதங்களில் 100 முதல் 150 வங்கிக் கிளைகளை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் திறக்க தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏறக்குறைய 49.30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளன, இதில் 70சதவீதத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் 5 ஆண்டுகளுக்கும்மேலாக வங்கியில் தொடர்ந்து பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

click me!