Gold Rate Today:தங்கம் விலை கிடுகிடு உயர்வு!ஒரேநாளில் சவரனுக்கு இவ்வளவு அதிகமா! வெள்ளி விர்ர்!இன்றைய நிலவரம்?

By Pothy RajFirst Published Oct 22, 2022, 10:25 AM IST
Highlights

கடந்த 3-நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ஒரேநாளில் ரூ.600 அதிகரித்துள்ளது.

கடந்த 3-நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. சவரனுக்கு ஒரேநாளில் ரூ.600 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை இன்று கிராமுக்கு 75ரூபாயும், சவரனுக்கு 600 ரூபாயும் அதிகரித்துள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,665 ஆகவும், சவரன், ரூ.37,320 ஆகவும் இருந்தது. 

தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.160 குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

இந்நிலையில் சனிக்கிழமை (இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 75 ரூபாய் அதிகரித்து, ரூ.4,740ஆக உயர்ந்தது. சவரனுக்கு ரூ.600 ஏற்றம் கண்டு, ரூ.37,920ஆக உயர்ந்தது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,740க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை இந்த வாரம் ஏற்றத்துடன் தொடங்கினாலும் புதன்கிழமையிலிருந்து படிப்படியாக 3 நாட்கள் குறைந்தது, இந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.320 குறைந்தது. ஆனால், இன்று யாரும் எதிர்பாரா வகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிகரித்து, கடந்த 3 நாட்களில் இழந்த விலையைவிட ஒரு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை! குழப்பத்தில் மக்கள்! இன்றைய நிலவரம் என்ன?

விலைக் குறைவு நீடிக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு இன்றைய உயர்வு பெரிய ஷாக்காக அமைந்துள்ளது. தந்தேராஸ் பண்டிகை வடமாநிலங்களில் இன்று முதல் தொடங்குவதால், தங்கத்துக்கான தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது.தங்கம் சவரன் ஏறக்குறைய ரூ.38ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

தங்கம் விலை திடீரென உயர்ந்திருப்பதால், மேலும் உயரலாம் என அச்சத்தால் தங்கம் வாங்குவோர் மத்தியில் வாங்கும் ஆர்வம் அதிகரி்த்துள்ளது. 

தங்கம் விலை சற்று உயர்வு! சவரனுக்கு ரூ.80 ஏற்றம்: இன்றைய நிலவரம் என்ன?

அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் கூட்டத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதம் உயர்த்தப்படும் நிலையில் தங்கம் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

வெள்ளி விலையும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ஒரு ரூபாய் 70 பைசா அதிகரித்து, ரூ.63.20 ஆகவும், கிலோவுக்கு ரூ.1,700 உயர்ந்து ரூ.63,200 ஆகவும் விற்கப்படுகிறது


 

click me!