Diwali 2022 Bank Holidays:வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை! எந்தெந்த நகரங்களில் எனத் தெரிந்து கொள்ளுங்கள்

By Pothy RajFirst Published Oct 22, 2022, 9:34 AM IST
Highlights

வங்கிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. எந்தெந்த நகரங்களில் 6 நாட்கள் விடுமுறை எனத் தெரிந்து கொள்ளலாம்

வங்கிகளுக்கு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை விடப்பட உள்ளது. எந்தெந்த நகரங்களில் 6 நாட்கள் விடுமுறை எனத் தெரிந்து கொள்ளலாம்

அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு மட்டும் பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளுக்கு ஏற்ப 21 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. 

ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை

இந்த 21 நாட்கள் விடுமுறையில் வார விடுமுறை நாட்களான 2வது,4-வது சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் அடங்கும். இது தவிர பொதுவான பண்டிகை நாட்களிலும், மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் பண்டிகை நாட்களிலும் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது

அக்டோபர் மாதம் விடுமுறை நாட்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஏற்கெனவே பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறையின்படி, வங்கிகள் பொது விடுமுறை நாட்களிலும், மாநிலங்களுக்கு ஏற்ப பிராந்திய விடுமுறை நாட்களும்வங்கிகளுக்கு மாறுபடும். 

கோதுமை, கடுகு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளி, தந்தேராஸ் உள்ளிட்ட பண்டிகை வருவதையொட்டி நாளை முதல் பல்வேறு மாநிலங்களில் வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை நகரங்களுக்கு ஏற்ப மாறுபடும்

அக்டோபர் 22: மாதத்தில் 4-வது சனிக்கிழமை விடுமுறை

அக்டோபர் 23- ஞாயிற்றுக்கிழமை விடுமுறை

அக்டோபர் 24- காளிபூஜை, தீபாவளி, நர்கா சதுர்தசி(வங்கிகளுக்கு காங்டாக், ஹைதராபாத், இம்பால் தவிர அனைத்து இடங்களிலும் விடுமுறை)

அக்டோபர் 25: லட்சுமி பூஜை, தீபாவளி, கோவர்தன் பூஜை(காங்டாக், ஹைதராபாத், இம்பால், ஜெய்பூரிலும் வங்கிகளுக்கு விடுமுறை)

இனி கொரோனா தடுப்பூசி கொள்முதல் இல்லை!ரூ.4 ஆயிரம் கோடியை திரும்ப ஒப்படைக்கிறது சுகாதாரத் துறை

அக்டோபர் 26: கோவர்தன் பூஜை, விக்ரம் சாவந்த் புத்தாண்டு, பாய் பிஜ், பாய் துஜ், தீபாவளி, லட்சுமிபூஜை(அகமதாபாத், பெலாபூர், பெங்களூரு, டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர்,லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா, ஸ்ரீநகரில் வங்கிகளுக்கு விடுமுறை)

அக்டோபர் 27: பாய்தூஜ், சித்ரகுபத் ஜெயந்தி, லட்சுமி பூஜை, தீபாவளி, நிங்கோல் சக்குபா(காங்டாக், இம்பால், கான்பூர், லக்னோ நகரங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
 

click me!