அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்கள் ரகுராம் ராஜன், சி ரங்கராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்களை அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வேண்டும் என்று முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்கள் ரகுராம் ராஜன், சி ரங்கராஜன் உள்ளிட்ட பொருளாதார வல்லுநர்களை அழைத்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்த வேண்டும் என்று முன்னாள் நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்களும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்காத மத்திய அரசு மீது கடுமையாகச் சாடியுள்ளனர்.
கையால் நெய்யப்பட்ட பிரதமர் மோடி அணிந்த ஆடையின் சிறப்பு இதுதான்!!
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடந்த சில மாதங்களாகக் கடுமையாகச் சரிந்து வருகிறது. ரூபாய் மதிப்பு 83 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீட்டை திரும்பப் பெறுவது, வட்டிவீத உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் ரூபாய் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிதியாண்டில் மட்டும் ரூபாய் மதிப்பு 10% சரிந்துள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பும் 15 சதவீதம் குறைந்து, 11000 கோடி டாலர் வெளியேறியுள்ளது. பொருளாதாரம் ஆபத்தான போக்கிற்கு நகர்வதற்கு தொடர்பாக மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி சாடுகிறது.
ஆனால், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அளித்த பேட்டியில் “ ரூபாய் மதிப்பு சரிவதாக பார்க்கவில்லை, டாலர் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்” என விளக்கம் அளித்திருந்தார்.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ மத்திய நிதி அமைச்சரோ, ரூபாய் மதிப்பு சரியவில்லை, டாலர் மதிப்பு வலுவடைவதாகத் தெரிவித்த அறிக்கை எல்லாம் ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்காது. மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுத்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சியைத் தடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவைத் தடுக்க யாரும்உதவி செய்ய இயலாத நிலைக்கு அரசு இருக்கிறது. அதிகமான பணவீக்கம், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, வட்டிவீத உயர்வு ஆகியவற்றின் விளைவுதான் ரூபாய் மதிப்பு சரிவு.
இந்த நேரத்தில் மத்திய அரசுக்கு நாட்டின் அனைத்து அனுபவங்களும், ஆலோசனைகளும் தேவை. தங்கள் இதயத்தில் நாட்டின் நலன்குறித்து நினைத்துவரும் சிறந்த பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனைகளைக் கேட்கலாம் என நான் பரிந்துரைக்கிறேன்
உ.பி.யில் பதிவான வாக்கு செல்லாது! காங்கிரஸ் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் மூலம் சசி தரூர் புலம்பல்
டாக்டர் சி ரங்கராஜன், டாக்டர் ஒய்வி ரெட்டி, டாக்டர் ராகேஷ் மோகன், டாக்டர் ரகுராம் ராஜன், மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோரை அழைத்து மிகுந்த ரகசியமாக பிரதமர் மோடி உடனடியாக ஆலோசனை நடத்த வேண்டும் என்பது என்னுடைய அறிவுரை.
அடுத்த என்ன நடவடிக்கையை அரசு எடுக்கலாம் என்று இந்த பொருளாதார வல்லுநர்களிடம் பிரதமர் மோடி ஆலோசிக்கலாம். இந்த கூட்டத்தில் நிதிஅமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர், ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் இடம் பெற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.