
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரி்ட்டனை தாக்கல் செய்யும் கால அவசாகம் இன்று(21ம்தேதி) வரை நீட்டித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை(சிபிஐசி) வெளியிட்டுள்ளது
ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை
செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் கடைசித் தேதி நேற்றுடன்(20ம்தேதி) முடிந்துவிட்டது. ஆனால், ஜிஎஸ்டி போர்டல் வேகம் குறைவாக இருந்தது இதனால் பலரும் ஜிஎஸ்டி ரிட்டனை தாக்கல் செய்ய முடியாமல் சிரமத்துக்குள்ளாகினர்.
இதையடுத்து, ஜிஎஸ்டி தாக்கல் செய்பவர்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு சிபிஐசி, ஜிஎஸ்டி ரிட்டன் தாக்கல் செய்யும் காலத்தை இன்று ஒருநாள் மட்டும் நீட்டிப்பு செய்துள்ளது.
தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி! சவரனுக்கு ரூ.160 குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?
இது தொடர்பாக சிபிஐசி வெளியிட்ட உத்தரவில் “ 2022, செப்டம்பர் மாத ஜிஎஸ்டி ரிட்டன் ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்யும் காலம் இன்று(21ம்தேதி) மட்டும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 20ம் தேதிகடைசி தேதியாகஇருந்து. ஆனால், ஜிஎஸ்டி போர்டலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
கோதுமை, கடுகு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கல் செய்வது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. சில மாநிலங்களில் 20ம் தேதி, 22ம் தேதி மற்றும் 24ம்தேதிகளில் தாக்கல் செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 20ம் தேதி தாக்கல் செய்ய முடியாதவர்கள் ஜிஎஸ்டிஆர் 3பி ரிட்டன் இன்று இரவு 12மணிவரை தாக்கல் செய்து கொள்ளலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.