தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு டிஜிட்டல் கிப்ட் கார்டு (gold gift card) மூலம் தங்கம் வாங்கும் முறையை பேடிஎம்(PayTM) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு டிஜிட்டல் கிப்ட் கார்டு(Gold gift card) மூலம் தங்கம் வாங்கும் முறையை பேடிஎம் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பேடிஎம் பயன்படுத்துவோர் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு பல்வேறு நிறுவனங்களின் கிப்ட் கார்டுகளை வாங்கி பரிசாக வழங்கும் ஏற்பாடுகளை பேடிஎம் நிறுவனம் செய்துள்ளது. இதன்படி, தனிஷ்க், ப்ளூஸ்டோன், மலபார், கல்யான் ஜூவல்லர்ஸ், ஜோய்ஆலுக்காஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கிப்ட் கார்டுகளையும் வழங்குகிறது
வங்கிகளுக்கு 6 நாட்கள் விடுமுறை! எந்தெந்த நகரங்களில் எனத் தெரிந்து கொள்ளுங்கள்
இதன்படி பேடிஎம் பயன்படுத்துவோர் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு ரூ.1000 முதல் கிப்ட் கார்டுகளை பரிசாகவழங்கி, அதன் மூலம் 100 சதவீதம் கேஷ்பேக் புள்ளிகளைப் பெறலாம். இந்த கிப்ட்கார்டை பயன்படுத்தி கடைகளுக்குச் சென்று நேரடியாகவோ அல்லது ஆன்லைனிலோ கொடுத்து அதற்குரிய தள்ளுபடியைப் பெறலாம் அல்லது நகை வாங்கலாம்.இந்த கார்டின் செல்லுபடி காலம் 12 மாதங்களாகும்.
கிப்ட்கார்டு வாங்கியபின் கிடைக்கும் கேஷ்பேக் புள்ளிகள், பயனாளியின் பேடிஎம் வாலட்டில் சேமிக்கப்படும். மிந்த்ரா, ஜோமேட்டோ, டோமினோஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் ரீடீம் செய்யலாம். கிப்ட் கார்டுவாங்கும் பயனாளிகள் பேடிஎம்வாலட், பேடிஎம் யுபிஐ, ஆன்லைன் பேங்கிங், டெபிட் கார்டுகள் மூலம் வாங்கலாம்.
ரூபாய் வீழ்ச்சியைத் தடுக்க ரகுராம் ராஜனை அழைத்துப் பேசுங்கள்: பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை
இது தவிர மளிகைப் பொருட்கள், பேஷன்பொருட்கள், பர்னிச்சர், மின்னணுசாதனங்கள், ஓடிடி, பயணங்கள், உணவு மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றுக்கான கிப்ட் கார்டுகளையும் பேடிஎம் நிறுவனம் வழங்குகிறது.
கிப்ட்கார்டை எவ்வாறு வாங்குவது, ரிடீம் செய்வது
1. பேடிஎம் செயலியைத் ஓபன் செய்து, “சேவ் மோர் வித் பேடிஎம்” பகுதிக்கு செல்ல வேண்டும்
2. கிப்ட் கார்ட்ஸ் பகுதியை தேர்வு செய்து, அதில் ஜூவல்லரி பகுதிக்கு சென்று, கிப்ட் கார்டு பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
3. எந்த நிறுவனத்தில் இருந்து கிப்ட் கார்டு வாங்க விரும்புகிறோமோ, எந்த தொகைக்கு வாங்க விரும்புகிறோமோ அதைத் தேர்வு செய்யது வாங்கலாம்.
கோதுமை, கடுகு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
4. தேர்வு செய்த கிப்ட் கார்டுக்கு பணத்தை பேடிஎம் யுபிஐ, பேடிஎம் வாலட், ஆன்லைன் பேங்கிங், டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தலாம்.
5. கிப்ட் கார்டுகளை அதற்குரிய கடைகளில் கொடுத்து ரீடீம் செய்யலாம், அல்லது நகைகளை வாங்கலாம்.