தங்கம் விலை கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி இந்த வாரம் தொடங்கியும் நீடிக்கிறது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த விலை வீழ்ச்சி இந்த வாரம் தொடங்கியும் நீடிக்கிறது. தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாயும், சவரனுக்கு 120 ரூபாயும் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
lic hfl:கடன் வாங்குறது காஸ்ட்லி! EMI உயரும்! LIC ஹவுசிங் பைனான்ஸ் வட்டியை உயர்த்தியது
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,815க்கும், சவரன் ரூ.38,520க்கும் விற்கப்பட்டது.
தங்கம் விலை செவ்வாய்கிழமை(இன்று) காலை மீண்டும் விலை குறைந்தது. கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் சரிந்து, ரூ.4,800 ஆகவும், சவரனுக்கு ரூ.120 சரிந்து, ரூ.38,400ஆகவும் விற்கப்படுகிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4800ஆக விற்கப்படுகிறது.
தங்கப் பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
தங்கம் விலை கடந்த 15ம் தேதி முதல் சவரனுக்கு ரூ.912 குறைந்துள்ளது. சர்வதேச சூழல், அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு, வரும 25 முதல் 27ம் தேதி அமெரி்க்க பெடரல் வங்கியின் கூட்டம் ஆகியவற்றில் எடுக்கும் முடிவு தங்கத்தின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஏற்கெனவே அமெரிக்க பெடரல் வங்கியின் சார்பில் நடக்க இருக்கும் கூட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த எதிர்பார்ப்பால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்ற நோக்கில் நேற்று பங்குகளை விற்கத் தொடங்கியுள்ளனர்.
இனி ஏமாற்ற முடியாது! தரம் குறைந்த, உண்மையில்லா செய்திகள் ரேங்கிங் ஆகாது: கூகுள் கிடுக்கிப்பிடி
இது இந்தியப் பங்குச்சந்தை, ஆசியப் பங்குச்சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ரூ.4.90 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆதலால், சர்வதேச அளவில் ஏற்படும் மாற்றங்கள், பெடரல் வங்கியின் முடிவு ஆகியவற்றால் இந்த வாரத்திலும் தங்கத்தின் விலையில் பெரிய சரிவு இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்று 40 பைசா குறைந்து, ரூ.60.70 ஆகவும், கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.60,700க்கும் விற்கப்படுகிறது