எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸிங் நிறுவனம், கடனுக்கான வட்டி வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி இன்று அறிவித்துள்ளது.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸிங் நிறுவனம், கடனுக்கான வட்டி வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி இன்று அறிவித்துள்ளது.
இதன்படி இதற்கு முன் 7.50 சதவீதமாக இருந்த வட்டி இன்று முதல் 8 சதவீதமாக அதிகரிக்கும். இந்த புதிய வட்டி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் பைனானில் கடன் பெற்றவர்களின் மாதாந்திர இஎம்ஐ கட்டணம் இனி அதிகரிக்கும்.
எல்ஐசி பாலிசிதாரர்களே நல்ல வாய்ப்பு ! காலாவதியாகிவிட்ட காப்பீட்டை புதுபிக்க சூப்பர் சான்ஸ்
கடந்த இரு வாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி, பணவீக்கத்தைக் குறைக்கும் பொருட்டு கடனுக்கான வட்டி வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தி அறிவித்தது. அதன் எதிரொலியாக எல்ஐசி பைனான்ஸ் நிறுவனம் தற்போது வட்டியை அதிகரித்துள்ளது.
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் சிஇஓ விஸ்வநாத் கவுட் கூறுகையில் “ இந்தவட்டி உயர்வு எதிர்பார்த்ததுதான். ரிசர்வ் வங்கி 50 புள்ளிகள் வட்டியில் உயர்த்தியது.அதன்படி மற்ற வங்கிகளும், சர்வதேச சூழலுக்கு ஏற்ப வட்டிவீதத்தை உயர்த்தியுள்ளோம்.
தங்கப் பத்திரம் விற்பனை இன்று தொடக்கம்: தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள்
இந்த வட்டி உயர்வு மிகக்குறைவுதான். தற்போது வீடுகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த சிறிய வட்டி உயர்வு எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்
எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி ரூ.50 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 8.05சதவீதம் வட்டி, ரூ.50 லட்சத்துக்கு மேல் ரூ.2 கோடி வரை கடன் பெறுவோருக்கு 8.25%. இவர்களுக்கு சிபில் ஸ்கோர் 700 அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும்.
பங்குச்சந்தையில் ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்: 59,000 புள்ளிகளுக்கு கீழ் சென்செக்ஸ்: என்ன காரணம்
கிரெடிட் ஸ்கோர் 600 முதல் 699 வரை இருந்தால் வீட்டுக்கடனஅ ரூ.50 லட்சம் வரை பெறுவோருக்கு 8.30% வட்டி. ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடிவரை பெறுவோருக்கு 8.50% வட்டி வசூலிக்கப்படும். சிபில் ஸ்கோர் 600க்கும் கீழ் இருந்தால் ரூ.50 லட்சம் வரை கடன் பெறுவோருக்கு 8.70%வட்டி, ரூ.50 லட்சம் முதல் ரூ.ஒரூ கோடிவரை கடன் பெறுவோருக்கு 8.90% வட்டி விதிக்கப்படும்.