நவராத்திரி பண்டிகையின்போது பயணிகள் ரயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் நவராத்திரி விரதச் சாப்பாட்டை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
நவராத்திரி பண்டிகையின்போது பயணிகள் ரயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில் நவராத்திரி விரதச் சாப்பாட்டை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
நவராத்திரி பண்டிகையின் போது விரதம் இருப்பவர்கள் தவிர்க்க முடியாத நேரத்தில் ரயில் பயணம் செய்ய வேண்டியதிருக்கலாம்.
அப்போது ரயிலில் வழக்கமாக வழங்கப்படும் உணவுகளை விரதம் நேரத்தில் சாப்பிட தயங்குவார்கள். வீட்டிலிருந்து கொண்டுவரவேண்டும் அல்லது பழங்கள், குளிர்பானங்களை குடித்து விரதத்தை கட்டுப்பாடக வைக்க வேண்டும்.
அசுர வளர்ச்சியில் அதானி குழுமம்! பங்குச்சந்தையில் டாடா குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி சாதனை
விரதச்சாப்பாடு சாப்பிட வேண்டுமென்றால், வீட்டுக்குச்சென்றுதான் சாப்பிட முடியும்.
இந்த குறையைத் தவிர்க்கும் நோக்கில், நவராத்திரி விரதம் இருப்பவர்களுக்காக விரதச் சாப்பாடு என்ற அம்சத்தை ஐஆர்சிடிசி அறிமுகம்செய்துள்ளது. இந்த சிறப்பு விரதச் சாப்பாடு முதல் கட்டாக 400 ரயில்வே நிலையங்களில் அறிமுகம் செய்யப்படுகிறது.
இதனால் நவராத்திரி விரதம் இருப்பவர்கள் விரதச் சாப்பாடு சாப்பிடமுடியவில்லையே என்ற பதற்றம் இன்றி பயணிக்கலாம். விரதம் இருப்பவர்களுக்கு புதிதாக ஒரு தட்டையும் ஐஆர்சிசிடி வழங்குகிறது.
உலகப் பொருளாதார மந்தநிலை 2023ல் உருவாகலாம்: உலக வங்கி எச்சரிக்கை
இந்த விரதச் சாப்பாட்டை ஆர்டர் செய்ய பயணிகல் 1323 என்ற எண்ணுக்கு ஆர்டர் செய்ய வேண்டும். ஆர்டர்செய்த சிறிதுநேரத்தில் சுத்தமான, யாரும் தொடாத தட்டுகள் மூலம் விரதச்சாப்பாடு பயணி இருக்கும் இடத்துக்கே டெலிவரி செய்யப்படும்.
இந்த விரதச் சாப்பாடு முறை கடந்த ஆண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால், பெரிதாக வரவேற்புப் பெறவில்லை. ஆனால், கொரோனா பிடியிலிருந்து விடுபட்டுவிட்டதால், இந்த முறை நல்ல வரவேற்பு இருக்கும் எனத் தெரிகிறது
ஐஆர்சிடிசி மக்கள் தொடர்பு அதிகாரி ஆனந்த் குமார் ஜா கூறுகையில் “ நவராத்திரி விரதம் காலத்தில் ரயிலில் பயணிக்கும் பயணிகள் சரியான சாப்பாடுஇல்லை , குடிக்க ஏதும் இல்லை என வருத்தப்படுவார்கள். அதை மனதில் வைத்து, நவராத்திரி விரதச் சாப்பாட்டை ஐஆர்சிடிசி அறிமுகம் செய்துள்ளது.
சீன லோன் ஆப்ஸ்: பேடிஎம், ரேசர்பே செயலிகளின் ரூ.46 கோடி முடக்கம்: அமலாக்கப்பிரிவு அதிரடி
இந்தவிரதச் சாப்பாடு என்பது மக்களின் ஆதரவைப் பொறுத்து தொடர்ந்து செயல்படும்
இதன்படி, பழங்கங்கள், கோதுமை பக்கோரி, தயிர் ஆகியவை சேர்ந்து ரூ.99க்கு வழங்கப்படும்.
2 பரோட்டாக்கள், உருளைக்கிழங்கு கறி, சாகோ புட்டிங் ரூ.99க்கு வழங்கப்படும்.
4 பரோட்டாக்கள், 3 விதமான காய்கறிகள், சாகோ கிச்சடி ஆகியவை சேர்த்து ரூ.199க்கு வழங்கப்படும் “ எனத் தெரிவித்தார்