இந்தியப் பங்குச்சந்தையில் ஒட்டுமொத்த மதிப்பில் டாடா நிறுவன குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி அதானி குழுமம் சாதனைபடைத்துள்ளது. அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.22 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையில் ஒட்டுமொத்த மதிப்பில் டாடா நிறுவன குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி அதானி குழுமம் சாதனைபடைத்துள்ளது. அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு ரூ.22 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.
மும்பைப் பங்குச்சந்தையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில், அதானி குழுமத்தின் ஒட்டுமொத்த 9 நிறுவனங்களின் மதிப்பு, இதில் சமீபத்தில் வாங்கிய அம்புஜா சிமெண்ட் நிறுவனம் உள்பட ரூ.22 லட்சம் கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை ! சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?
ஆனால், டாடா நிறுவனத்தின் 27 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.20 கோடிக்கும் சற்று அதிகம்தான். டாடா நிறுவனக் குழுமத்தையே அதானி குழுமம் முறியடித்துள்ளது.
இதையடுத்து, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி குழுமத்தின் சந்தை மதிப்பு ரூ.17லட்சம் கோடியாக 3வது இடத்தில் இருக்கிறது. இதன்மூலம் உலகளவில் கோடீஸ்வரர்களில் ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்ட பட்டியலில் 3-வது இடத்தை அதானி பிடித்துள்ளார். அமேசான் நிறுவனர் ஜெப் பிஜோஸையும் அதானி தோற்கடித்தார். முதலிரு இடங்களில் எலான் மஸ், லூயிஸ் விட்டான் பெர்நார்ட் அர்னால்டு உள்ளனர்
ரயில்வே டிடிஇக்கு வழங்கப்பட்ட ‘புதிய கருவி’யால் தினசரி 7,000 பயணிகளுக்கு படுக்கை வசதி
அதானியின் நிகர சொத்து மதிப்பு 154.70 பில்லியன் டாலராகும். இதன் மூலம் லூயிஸ் விட்டான் பெர்நார்ட் அர்னால்டை அதானி தோற்கடித்தார் என்று கூறப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் அதானியின் சொத்து மதிப்புகுறைந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அமெரி்க்காவிலும் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தப் போவதாக வெளியான அறிவிப்பால் அந்நாட்டு பங்குச்சந்தையும் ஆட்டம்கண்டது. இதனால், அமெரிக்க கோடீஸ்வரர்களான எலான் மஸ்க், பெர்னார்ட் அர்னால்ட் சொத்து மதிப்பும் குறைந்தது.
உலகின் 2-வது கோடீஸ்வரராக உயர்ந்தார் கெளதம் அதானி: ஃபோர்ப்ஸ் பட்டியல்
முதலில் ஆசியாவின் கோடீஸ்வரராக மாறிய அதானி, சொத்துமதிப்பில் வாரன் பபெட், பில் கேட்ஸை தோற்கடித்தார். அதன்பின் வேகமாக முன்னேறிய அதானி, லூயிஸ் விட்டான் பெர்னார்ட் அர்னால்ட், எலான் மஸ்கையும் தோற்கடித்தார்.