gold rate today: சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை ! சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

Published : Sep 19, 2022, 10:05 AM IST
gold rate today: சரிவுடன் தொடங்கிய தங்கம் விலை ! சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது: இன்றைய நிலவரம் என்ன?

சுருக்கம்

கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை சரிந்தநிலையில் இந்த வாரமும் விலைக் குறைவு நீடிக்கிறது.

கடந்த வாரம் முழுவதும் தங்கம் விலை சரிந்தநிலையில் இந்த வாரமும் விலைக் குறைவு நீடிக்கிறது.  
கடந்தவாரத்தில் 5 நாட்களில் சவரனுக்கு ரூ.952 குறைந்து சனிக்கிழமை மட்டும் சவரனுக்கு ரூ.112 அதிகரித்தது. 

தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.8 குறைந்துள்ளது, சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது.  
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,640 ஆகவும், சவரன், ரூ.37,120 ஆகவும் இருந்தது. 

ரயில்வே டிடிஇக்கு வழங்கப்பட்ட ‘புதிய கருவி’யால் தினசரி 7,000 பயணிகளுக்கு படுக்கை வசதி

இந்நிலையில் திங்கள்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 8 குறைந்து ரூ.4,632ஆக குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.64 சரிந்து, ரூ.37,056ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 
கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,632ஆக விற்கப்படுகிறது.

உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவரை கட்டாயமாக நியமக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு

தங்கம் விலை கடந்தவாரத்தில் 5 நாட்களும் சரிந்த நிலையில் சனிக்கிழமை மட்டும சற்று உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்தது. இதனால் சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.112 அதிகரித்தது. 

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்வு குறித்த அறிவிப்பு இந்த வாரம் வெளியாகலாம் எனத் தெரிகிறது. இந்த இரு அறிவிப்புகளும் உலகப் பங்குச்சந்தையிலும் தங்கம் விலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது. 

உலகப் பொருளாதார மந்தநிலை 2023ல் உருவாகலாம்: உலக வங்கி எச்சரிக்கை

இதனால் அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத அறிவிப்பு முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு அதிகரிக்கும், இது உலகின் பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கும். அதன்பின் தங்கத்தின் மீதான முதலீடு குறையும். அப்போது,  தங்கத்துக்கான தேவை குறைந்து விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது. 

வெள்ளி விலையில் மாற்றமில்லை. வெள்ளி கிராம் ரூ.62.00ஆகவும், கிலோ ரூ.62,000 ஆகவும் விற்கப்படுகிறது

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?