gold rate today: ஊசலாட்டத்தில் தங்கம் விலை ! மீண்டும் உயர்ந்தது: இன்றைய நிலவரம் என்ன?

By Pothy RajFirst Published Sep 20, 2022, 10:17 AM IST
Highlights

வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு நேற்று 8 ரூாபய் குறைந்த நிலையில் அதே அளவு இன்று உயர்ந்துள்ளது. 

வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு நேற்று 8 ரூாபய் குறைந்த நிலையில் அதே அளவு இன்று உயர்ந்துள்ளது. 

தங்கம் விலை இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்துள்ளது, சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது.  

அசுர வளர்ச்சியில் அதானி குழுமம்! பங்குச்சந்தையில் டாடா குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி சாதனை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,632 ஆகவும், சவரன், ரூ.37,056 ஆகவும் இருந்தது. 

இந்நிலையில் செவ்வாய்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 8 உயர்ந்து ரூ.4,640ஆக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.64 ஏற்றம் கண்டு, ரூ.37,120ஆக அதிகரித்துள்ளது. கோவை, திருச்சி, வேலூரில்  தங்கம் கிராம் ரூ.4,640ஆக விற்கப்படுகிறது.

தங்கம் விலை கடந்தவாரத்தில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்தது. ஆனால், சனிக்கிழமை சவரனுக்கு ரூ.112 அதிகரித்தது. வாரத்தின் முதல்நாளான நேற்று தங்கம் விலை மீண்டும் சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது. ஆனால், இன்று ரூ.64 உயர்ந்துள்ளது.தங்கத்தின் விலை ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. 

ரயில்வே டிடிஇக்கு வழங்கப்பட்ட ‘புதிய கருவி’யால் தினசரி 7,000 பயணிகளுக்கு படுக்கை வசதி

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், பேங்க் ஆப் இங்கிலாந்து வட்டி வீதம் உயர்வு குறித்த அறிவிப்பு வரும் வரை தங்கத்தின் விலையில் நிலையற்ற போக்குகாணப்படும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவித்தன்ர.

இந்த இரு அறிவிப்புகளும் இந்த வாரம் வெளியாகும்போது, உலகப் பங்குச்சந்தையிலும் தங்கம் விலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது. 

உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவரை கட்டாயமாக நியமக்க வேண்டும்: வங்கிகளுக்கு நிர்மலா சீதாராமன் உத்தரவு

வெள்ளி விலை உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து, ரூ.62.30ஆகவும், கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து, ரூ.62,300 ஆகவும் விற்கப்படுகிறது
 

click me!