தாய்லாந்து மன்னரின் அரண்மனை 23,51,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
தாய்லாந்தின் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன், உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராகவும், அரச குடும்பத்தின் பணக்காரர்களில் ஒருவராகவும் திக்ழகிறார். கிங் ராமா X என்றும் அழைக்கப்படும் அவரிடம் உலகின் விலை உயர்ந்த வைரங்கள் மற்றும் ரத்தினங்கள் அதிகமாக உள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், கார்கள் மற்றும் பல ஆடம்பரப் பொருட்களையும் வைத்திருக்கிறார். தாய்லாந்தின் அரச குடும்பத்தின் சொத்து மதிப்பு 40 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 3.2 லட்சம் கோடி.
மஹா வஜிரலோங்கோர்னின் சொத்துக்கள் தாய்லாந்து முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகின்றன. ஆம், அவர் தாய்லாந்தில் 6,560 ஹெக்டேர் (16,210 ஏக்கர்) நிலத்தை வைத்திருக்கிறார், தலைநகர் பாங்காக்கில் 17,000 ஒப்பந்தங்கள் உட்பட நாடு முழுவதும் 40,000 வாடகை ஒப்பந்தங்கள் உள்ளன. இந்த நிலங்களில் வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல அரசு கட்டடங்கள் உள்ளன. தாய்லாந்தின் இரண்டாவது பெரிய வங்கியான சியாம் கமர்ஷியல் வங்கியில் மன்னர் மஹா வஜிரலோங்கோர்ன் 23 சதவீத பங்குகளையும், நாட்டின் மிகப்பெரிய தொழில்துறை நிறுவனமான சியாம் சிமெண்ட் குழுமத்தில் 33.3 சதவீத பங்குகளையும் வைத்துள்ளார்.
தாய்லாந்து மன்னரின் கிரீடத்தில் உள்ள ரத்தினங்களில் ஒன்று 545.67 காரட் பழுப்பு நிற கோல்டன் ஜூபிலி வைரமாகும், இது உலகின் மிகப்பெரிய மற்றும் விலையுயர்ந்த வைரம் என்று கூறப்படுகிறது. அதன் மதிப்பு ரூ.98 கோடி வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னரிடம் 21 ஹெலிகாப்டர்கள் உட்பட 38 விமானங்கள் உள்ளன. இதில் போயிங், ஏர்பஸ் விமானம் மற்றும் சுகோய் சூப்பர்ஜெட் ஆகியவை அடங்கும். இந்த விமானங்களின் பராமரிப்புக்காக அவர் ஆண்டுதோறும் ரூ.524 கோடி செலவிடுகிறார். லிமோசின், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த கார்களை கார்களையும் அவர் வைத்துள்ளார். இது தவிர, அரச படகுடன் 52 படகுகள் கொண்ட கடற்படையும் அவருக்கு சொந்தமானது. அனைத்து படகுகளிலும் தங்க வேலைப்பாடுகள் உள்ளன என்பது கூடுதல் சிறப்பு.
தாய்லாந்து மன்னரின் அரண்மனை 23,51,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது 1782 இல் கட்டப்பட்டது. ஆனால், மன்னர் அரச மாளிகையில் வசிக்கவில்லை. இந்த அரண்மனையில் பல அரசு அலுவலகங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் உள்ளன.
மாதம் ரூ.19 கோடி சம்பளம் வாங்கும் CEO! அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் இந்தியர்களில் ஒருவர்!