இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்... சீனாவுக்கு சரிவுதான்! மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு

By SG Balan  |  First Published Aug 3, 2023, 10:26 AM IST

இந்தியா ஒரு நீண்ட வளர்ச்சியின் தொடக்கத்தில் உள்ளது என்றும் அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி ஒரு முடிவுக்கு வரக்கூடும் என்றும் மார்கன் ஸ்டான்லி அறிக்கை கூறுகிறது.


வரும் காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்று புகழ்பெற்ற முதலீட்டு கண்காணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கூறியுள்ளது. நாட்டில் செய்யப்பட்டுவரும் சீர்திருத்தங்கள் மற்றும் ஸ்திரத்தன்மை காரணமாக லாபகரமான சூழல் இருக்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள இந்நிறுவனம், சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சிக்கான மேக்ரோ குறியீடுகள் நெகிழ்ச்சியாக உள்ளதாகவும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதம் வரை முன்னேற்றம் அடையும் பாதையில் உள்ளது செல்கிறது என்றும் மார்கன் ஸ்டான்லி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்கம் விற்பனை 7 சதவீதம் குறைந்தது! நகை வாங்க ஆர்வம் குறைந்தது ஏன்? உலக தங்க கவுன்சில் தகவல்

"எங்கள் மதிப்பீட்டில் இந்தியா 6வது இடத்திலிருந்து 1வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. மதிப்பீடுகள் இந்தியாவின் திறன் கடந்த அக்டோபரில் வெளியானதைக் காட்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது" என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"இந்தியா ஒரு நீண்ட வளர்ச்சியின் தொடக்கத்தில் உள்ளது. அதே நேரத்தில் சீனாவின் வளர்ச்சி ஒரு முடிவுக்கு வரக்கூடும்" என்றும் அறிக்கை கூறுகிறது.

சீன பங்குகள் மீதான மதிப்பீட்டை குறைத்துள்ள மார்க்ன் ஸ்டான்லி, முதலீட்டாளர்களுக்காக சீன அரசு எடுக்கும் நடவடிக்கைகள் லாபத்தைத் தக்கவைக்க போதுமானதாக இருக்காது என்றும் சுட்டிக்காட்டுகிறது. அதே வேளையில் மோர்கன் ஸ்டான்லி கணிப்புகளில் இந்தியாவின் மதிப்பு குறைந்த நிலையில் இருந்து படிப்படியாக மேம்பட்டு வந்துள்ளது கவனிக்கத்தக்கது.

விண்வெளியில் மரணம் அடைந்தால் என்ன நடக்கும்? விண்வெளி மருத்துவர் இம்மானுவேல் உர்கியேட்டா விளக்கம்

click me!