GST: ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி வரி.. அக் 1 முதல் அமல் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

By Raghupati R  |  First Published Aug 2, 2023, 10:38 PM IST

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பை அக்டோபர் 1 முதல் அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


இன்று டெல்லியில் 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றதஹு. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். 

அப்போது பேசிய அவர், “கேசினோக்கள், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிப்பு செயல்படுத்தப்படும் நடவடிக்கையை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் மறுஆய்வு செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆன்லைன் விளையாட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரியை 18% இருந்து 28%ஆக உயர்த்த 50வது ஜிஎஸ்டி கவுன்சிலில் திட்டமிடப்பட்டது. 

Tap to resize

Latest Videos

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு இணைய விளையாட்டு வீரர்கள் நல வாரியம் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சூதாட்ட விடுதிகள் அதிகம் உள்ள கோவா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் கடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தங்கள் மாநில நலனுக்கு இது புறம்பானதாக உணர்ந்தனர்.

Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!
 
இருப்பினும் அவர்கள் 28% வரி விதிப்பை ஏற்றுக்கொண்டனர். இந்த முடிவு எந்தத் தொழிலுக்கும் தீங்கு விளைவிப்பதில்லை என்று அரசாங்கம் நிலைநிறுத்தினாலும், ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் இந்த நடவடிக்கையால் தொழில்துறையில் ஏற்படும் தாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளன, ஏனெனில் இது கேமிங் நிறுவனங்களின் நம்பகத்தன்மையை பாதிக்கும். 

இந்த முடிவு நிறுவனங்களுக்கான நிகர வரிகளை 1000 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று ஸ்டார்ட் அப்கள் கூறியுள்ளன. ஆன்லைன் சூதாட்டத்திற்கு தமிழக அரசின் தடையை பாதிக்காத வகையில் 28% ஜிஎஸ்டி விதிக்கப்படும்” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

500 ரூபாய் நோட்டு வைத்திருப்போர் எச்சரிக்கை.. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு - முழு விபரம் இதோ !!

click me!