மைக்ரான் நிறுவனம் குஜராத்தில் தனது ஆலையை அமைக்க உள்ளதால், அங்கு 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா , நாட்டை செமி கண்டக்டர் மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் மூலோபாய கூட்டாண்மைகளில் முன்னணியில் உள்ள வணிகத் தலைவர்களில் ஒருவர். இந்தியாவில் முதல் செமிகண்டக்டர் ஆலையை நிறுவுவதற்கான அமெரிக்க சிப் நிறுவனமான மைக்ரான் டெக்னாலஜியின் உறுதிப்பாட்டை மெஹ்ரோத்ரா சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தினார். மைக்ரான் நிறுவனம் குஜராத்தில் தனது ஆலையை அமைக்க உள்ளதால், அங்கு 5,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகான் இந்தியா 2023 இன் பின்னணியில், மைக்ரான் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் “இந்தியாவுக்குள் குறைக்கடத்தி உற்பத்தி சூழலை மேம்படுத்த மைக்ரோன் டெக்னாலஜியின் திட்டங்கள்” குறித்து இருவரும் விவாதித்தனர்.” என்று தெரிவித்துள்ளது.
சஞ்சய் மெஹ்ரோத்ரா தலைமையிலான மைக்ரான் இந்திய அரசாங்கத்துடன் இணைந்து சுமார் ரூ.22,540 கோடி செலவில் குறைக்கடத்தி ஆலையை அமைக்க உள்ளது. ஜூன் மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின் போது அறிவிக்கப்பட்ட ஒப்பந்தத்தின்படி, மைக்ரான் 2.75 பில்லியன் டாலர் ஆலையில் 825 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6,760 கோடி) செலுத்தும். மீதமுள்ள நிதி இரண்டு கட்டங்களாக இந்திய அரசால் வழங்கப்படும்.
மைக்ரானின் ஆலை டிசம்பர் 2024க்குள் முதல் ‘மேட் இன் இந்தியா’ சிப்பை உற்பத்தி செய்ய முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டமானது 500,000 சதுர அடியில் அறையைக் கொண்டிருக்கும். 2023 ஆம் ஆண்டில் கட்டம் கட்டமாக கட்டப்படும், இந்த வசதி 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் செயல்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சஞ்சய் மெஹ்ரோத்ரா தொழில்துறையில் 40 ஆண்டுகால அனுபவம் வாய்ந்தவர்.
யார் இந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா?
கான்பூரில் பிறந்த சஞ்சய் மெஹ்ரோத்ரா, புது தில்லியில் சர்தார் படேல் வித்யாலயாவில் உயர்நிலைப் பள்ளியில் படித்து வளர்ந்தார். அவர் BITS Pilani பல்கலைக்கழகத்தில் பொறியியலைத் தொடர்ந்தார், ஆனால் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மற்றும் கணினி அறிவியல் படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றார்.
சஞ்சய் மெஹ்ரோத்ரா 1988ல் பிரபலமான சேமிப்பக பிராண்டான SanDisk ஐ இணைந்து நிறுவினார். 2011 முதல் 2016 வரை அந்நிறுவனத்தின் CEO ஆக பணியாற்றினார். மேலும் Intel, Atmel மற்றும் Integrated Device Technology போன்ற பிரபல நிறுவனங்களில் அவர் பணியாற்றியுள்ளார். அவர் 2017ல் மைக்ரானின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மைக்ரானின் 2022 நிதியாண்டு அறிக்கையின்படி, சஞ்சய் மெஹ்ரோத்ராவின் ஆண்டு மொத்த ஊதியம் $28,840,809 (சுமார் ரூ. 237 கோடி). அதாவதுஅவரின் மாத ஊதியம் சுமார் 19 கோடி ஆகும். இவர் அமெரிக்காவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் 51வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஜினியராக இருந்து விவசாயியாக மாறிய நபர்.. சில ஆண்டுகளிலேயே கோடீஸ்வரராக மாறியது எப்படி?