2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 7 சதவீதம் குறைந்து 158.1 டன்னாக சரிந்துள்ளது.
இந்தியாவில் தங்கத்தின் தேவை 7 சதவீதம் குறைந்துள்ளதாக உலகளவில் மொத்த விற்பனை அளவில் தங்க விற்பனையை கண்காணிக்கும் உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 7 சதவீதம் குறைந்து 158.1 டன்னாக சரிந்துள்ளது. 2022ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் தங்கத்திற்கான தேவை 170.7 டன்னாக இருந்தது.
இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்... சீனாவுக்கு சரிவுதான்! மார்கன் ஸ்டான்லி நிறுவனம் கணிப்பு
தேவை குறைந்தாலும் விற்பனையான தங்கத்தின் மதிப்பு 4 சதவீதம் அதிகரித்து ₹82,530 கோடியாக இருந்தது. இதுவே 2022ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.79,270 கோடியாக இருந்தது.
2023ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ஆபரணத் தேவையும் 8 சதவீதம் குறைந்து 128.6 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் விற்கப்பட்ட 140.3 டன்களுடன் ஒப்பிடுகையில், நகைத் தேவை 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் மதிப்பு ₹65,140 கோடியிலிருந்து ₹67,120 கோடியாக உயர்ந்துள்ளது.
தங்கத்திற்கான மொத்த முதலீட்டுத் தேவை கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த 30.4 டன்களுடன் ஒப்பிடுகையில், 3 சதவீதம் குறைந்து 29.5 டன்களாக இருந்தது.
"தங்கத்தின் விலை உயர்ந்துகொண்டே வருவதும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டிருப்பதும் தங்கத்தின் தேவை குறைவதற்குக் காரணமாக இருக்கலாம்" என்று உலக தங்க கவுன்சில் அமைப்பின் இந்தியத் தலைமை நிர்வாக அதிகாரி சோமசுந்தரம் கூறுகிறார். 2,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பதும் தங்கத்தின் தேவையில் குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்றும் சோமசுந்தரம் குறிப்பிடுகிறார்.
உலக தங்க கவுன்சில், 2023ஆம் ஆண்டில் தங்கத்தின் தேவை 650-750 டன்கள் வரை இருக்கும் என்றும் கணித்துள்ளது.
விண்வெளியில் மரணம் அடைந்தால் என்ன நடக்கும்? விண்வெளி மருத்துவர் இம்மானுவேல் உர்கியேட்டா விளக்கம்