Tiago CNG price : ரூ. 6.10 லட்சம் துவக்க விலையில் டாடா CNG கார்கள் இந்தியாவில் அறிமுகம்

By Nandhini SubramanianFirst Published Jan 19, 2022, 1:41 PM IST
Highlights

டாடா மோட்டார்ஸ் முந்தைய அறிவிப்பின் படி இந்திய சந்தையில் டியாகோ மற்றும் டிகோர் CNG மாடல்களை அறிமுகம் செய்தது.
 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் டியாகோ iCNG மற்றும் டிகோர் iCNG மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய டியாகோ iCNG மாடலின் துவக்க விலை ரூ. 6.10 லட்சம் ஆகும். டிகோர் iCNG விலை ரூ. 7.70 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இந்தியாவில் புதிய டாடா டியாகோ iCNG மாடல் - XE, XM, XT, XZ+ (ST) மற்றும் XZ+ (DT) என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. டிகோர் iCNG மாடல் XZ, XZ+ (ST) மற்றும் XZ+ (DT) என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இரு மாடல்களின் விலை அவற்றின் பெட்ரோல் வேரியண்டை விட ரூ. 1 லட்சம் அதிகம் ஆகும். தோற்றத்தில் இந்த மாடல் முந்தைய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது.

புதிய மாடல்களில் iCNG பேட்ஜிங் மட்டுமே புதிதாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புது என்ஜின் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. என்ஜினை பொருத்தவரை புதிய டிகோர் iCNG மற்றும் டியாகோ iCNG மாடல்களில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 72 பி.ஹெச்.பி. திறன், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

CNG கிட் எடை அதிகமாகி இருப்பதால் புதிய மாடல்களின் சஸ்பென்ஷன் அப்டேட் செய்யப்பட்டு இருக்கிறது. டியாகோ iCNG மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 165mm அளவிலும் டிகோர் iCNG மாடலின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 168mm அளவிலும் இருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை அடுத்து வாடிக்கையாளர்கள் மாற்று எரிபொருள் கொண்டு இயங்கும் வாகனங்களை பயன்படுத்த துவங்கி உள்ளனர். 

டாடா டியாகோ iCNG மற்றும் டிகோர் iCNG மாடல்களின் அம்சங்களும் ஒரே மாதிரி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இரு மாடல்களிலும் 7 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஜெ.பி.எல். ஹார்மன் சவுண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

click me!