டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலை, அவரே மறுத்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸில் பதிவிட்டிருக்கிறார்.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. இதனை மறுத்துள்ள ரத்தன் டாடா தான் நலமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
ரத்தன் டாடா திங்கள்கிழமை அதிகாலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் நள்ளிரவு 12.30-1:00 மணியளவில் ரத்தன் டாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளியாயின. ரத்தன் டாடா உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார் என்றும் கூறப்பட்டது.
புகழ்பெற்ற இருதயநோய் நிபுணர் டாக்டர் ஷாருக் அஸ்பி கோல்வல்லாவின் வழிகாட்டுதலின் கீழ் நிபுணர்கள் குழு அவரை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்றும் சொல்லப்பட்டது. ரத்தன் டாடா இதனை மறுத்து எக்ஸில் பதிவிட்டுள்ளார். அதில் தாம் நலமாக இருப்பதாக விளக்கம் அளித்துள்ளார்.
ரத்தன் டாடா அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்திய வணிக உலகில் புகழ்பெற்றவராக இருக்கிறார். 86 வயதான டாடாவுக்கு முதுமை காரணமாக அவ்வப்போது உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இருந்தாலும் அவர் தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
ஐஆர்சிடிசி முதல் ஐ.டி. ரிட்டன் வரை... புதுப்புது ரூட்டில் களமிறங்கும் சைபர் கிரைம் மோசடி!
ரத்தன் நேவல் டாடா டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர். பிரபலமான தொழிலதிபராக இருந்தாலும், எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்டவர். தான் அளித்த நன்கொடைகளுக்கு பாராட்டுகளைக் குவித்தவர். தான் நடத்திவரும் டாடா அறக்கட்டளைகளுக்கு தொடர்ந்து தலைமை தாங்குகிறார்.
1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை இடைக்காலத் தலைவராகவும் இருந்தார்
பார்சி சமூகத்தைச் சேர்ந்த டாடாவுக்கு 2000ஆம் ஆண்டில் தேசத்தின் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. பிறகு, 2008ஆம் ஆண்டில் நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
1,000 ரூபாய் முதலீட்டை 2 கோடியாக மாற்றும் மியூச்சுவல் ஃபண்டு! வரியையும் சேமிக்கலாம்!