முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIPs) மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கான பிரபலமான வழியாகும். இந்தக் கட்டுரை உங்கள் இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் அளவைப் பொறுத்து அதிக வருமானம் ஈட்டும் சரியான SIP திட்டத்தை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ள உதவும்.
முறையான முதலீட்டுத் திட்டங்கள் (SIPs) மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுக்கு மிகவும் பிரபலமான வழிகளில் ஒன்றாகும். SIP திட்டத்தில் ஒரு நிலையான தொகையை தவறாமல் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் காலப்போக்கில் பெரிய தொகையை உருவாக்க முடிகிறது. இருப்பினும், SIP நிதிகள் நிறைய இருப்பதால், நிதி இலக்குகளை அடைய சிறந்த SIP திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது சவாலானது. இந்தக் கட்டுரை உங்கள் இலக்குகள் மற்றும் ரிஸ்க் எடுக்கும் அளவைப் பொறுத்து அதிக வருமானம் ஈட்டும் சரியான சிறந்த SIP திட்டத்தை உருவாக்குவது எப்படி என்று தெரிந்துகொள்ள உதவும்.
SIP என்றால் என்ன?:
முறையான முதலீட்டுத் திட்டம் அல்லது SIP (Systematic Investment Plan) என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு முறையாகும், இந்த முறையில், முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாந்திர அல்லது காலாண்டுக்கு ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். SIP நிதியில் தொடர்ந்து முதலீடு செய்வதற்கான நன்மைகள் கிடைக்கும். சிறிய தொகையில்கூட முதலீட்டைத் தொடங்கலாம். பெரிய தொகை இல்லாமலே மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் எளிமையான வசதியைக் கொடுக்கிறது.
SIP முறையில் முதலீடு செய்வது முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை படிப்படியாகக் அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக பணி ஓய்வு, குழந்தைளின் கல்வி அல்லது வீடு வாங்குதல் போன்ற நீண்ட கால நிதி இலக்குகளுக்கு இந்த முதலீட்டு முறை பயனுள்ளதாக இருக்கும்.
பஜாஜ் ஃபின்சர்வ் ஆப் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுச் செயலிகளை பயன்படுத்துவது முதலீட்டாளர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். உங்கள் வீடு, அலுவலகம் அல்லது பயணத்தின்போதுகூட உங்கள் முதலீடுகளை நிர்வகிக்கலாம். இது முதலீடு தொடர்பான முடிவுகளை எடுக்கவும் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் போர்ட்ஃபோலியோவை சரிசெய்துகொள்ளவும் கைகொடுக்கும்.
SIP முதலீட்டின் நன்மைகள்:
SIP முறையில் சிறந்த திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி யோசிக்கும் முன், SIP நிதிகள் மூலம் முதலீடு செய்வதில் உள்ள சில முக்கிய நன்மைகளைப் பார்ப்போம்:
1. ரூபாய் செலவு சராசரி: SIPகள் வழக்கமான முதலீடுகளை உள்ளடக்கியிருப்பதால், விலை குறைவாக இருக்கும்போது அதிக யூனிட்களையும், விலைகள் அதிகமாக இருக்கும்போது குறைவான யூனிட்களையும் வாங்க முடியும். இது முதலீடுகளின் ஒட்டுமொத்தச் செலவைக் குறைக்கிறது.
2. கூட்டுச் சக்தி: நீங்கள் எவ்வளவு காலம் முதலீடு செய்துள்ளீர்களோ, அந்த அளவுக்கு நன்மைகளைப் பெறலாம். கூட்டு வருமானம் காரணமாக உங்கள் பணம் வளர்ச்சியடையும் வாய்ப்பு அதிகம்.
3. ஒழுக்கமான முதலீடு: SIP நிதிகள் தொடர் முதலீட்டை ஊக்குவிக்கின்றன. நிதி இலக்குகளுடன் தொடர்ந்து செல்வது எளிதாகிறது.
4. குறைந்த தொகை முதலீடு: SIP நிதியில் மாதத்திற்கு 500 ரூபாயில் இருந்து கூட முதலீட்டைத் தொடங்கலாம். இது பலதரப்பட்ட முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டு வாய்ப்பை அளிக்கிறது.
நிதி இலக்கை அடையாளம் காணுதல்:
SIP திட்டத்தை உருவாக்குவதற்கான முதல் படி நிதி இலக்கை அடையாளம் காண்பது. முதலீட்டு இலக்கு அடிப்படையில்தான் எந்தவிதமான SIP திட்டத்தைத் தேர்வு செய்யலாம், முதலீட்டுக் காலம் மற்றும் மாதாந்திர முதலீட்டுத் தொகை ஆகியவையும் முதலீட்டு இலக்கை வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டும்.
● குறுகிய கால இலக்குகள் (1-3 ஆண்டுகள்): உங்கள் முதலீட்டு இலக்கு குறுகிய காலத்திற்கானதாக இருந்தால், அதாவது விடுமுறைக் காலச் செலவுக்காகச் சேமிப்பது அல்லது சிறிய அளவில் பொருட்கள் வாங்குவதற்காகச் சேமிப்பது போன்ற தேவைகளுக்காக முதலீடு செய்வதாக இருந்தால், குறைந்த ரிஸ்க் கொண்ட கடன் அல்லது ஹைபிரிட் நிதிகளைத் தேர்வுசெய்ய விரும்பலாம்.
● நடுத்தர கால இலக்குகள் (3-7 ஆண்டுகள்): கார் வாங்குவது அல்லது உயர் கல்வி செலவு போன்ற இலக்குகளுக்கு, ஈக்விட்டி மற்றும் கடன் நிதிகளை கலவையாகத் தேர்வு செய்யலாம். இதன் மூலம் SIP முதலீட்டில் உள்ள ரிஸ்க் மற்றும் வருமானத்துக்கு இடையே ஒரு சமநிலை இருக்கும்.
● நீண்ட கால இலக்குகள் (7+ ஆண்டுகள்): ஓய்வூதியத் திட்டமிடல் அல்லது சொத்துகளை வாங்குவது போன்ற நீண்ட கால இலக்குகளுக்கு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் மிகவும் பொருத்தமானவை. இது நீண்ட காலத்திற்கு அதிக வருமானத்தை அளிக்கும்.
ரிஸ்க்குகளும் முதலீட்டுக் காலமும்:
சிறப்பான SIP திட்டத்தைச் சரியாகத் தேர்ந்தெடுக்க, ரிஸ்க்கை எவ்வளவு தூரம் சமாளிக்க முடியும் என்பதைத் யோசித்து முடிவு எடுப்பது மிகவும் முக்கியமானது. மியூச்சுவல் ஃபண்டுகள் ரிஸ்க் புரொஃபைல் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. ரிஸ்க்கைப் பொறுத்து SIP நிதிகளைத் தேர்வுசெய்யலாம்.
● குறைந்த ரிஸ்க்: குறைந்த ரிஸ்க் போதும் என்று நினைக்கும் முதலீட்டாளர்கள் கடன் அல்லது லிக்விட் நிதிகளைக் கருத்தில்கொள்ள வேண்டும். இவை நிலைத்தன்மையையும் குறைந்த ஏற்ற இறக்கத்தையும் கொண்டதாக இருக்கும். ஆனால் மிதமான வருமானத்தையும் வழங்கும்.
● மிதமான ரிஸ்க்: உங்களுக்கு ஓரளவுக்கு ரிஸ்க்கை எடுக்கலாம் என்று தோன்றினால், ஈக்விட்டி மற்றும் கடன் நிதிகள் இரண்டிலும் முதலீடு செய்யலாம். இவை வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை இரண்டுக்கும் இடையே சமநிலையை வழங்குவதற்கு ஏற்றதாக இருக்கும்.
● அதிக ரிஸ்க்: SIP முதலீட்டில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்கள் சந்தை ஏற்ற இறக்கங்களைப் பொறுத்து, சிறு, நடுத்தர மற்றும் பெரிய ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வது சிறந்த தேர்வாகும்.
சிறந்த SIP முதலீட்டை உருவாக்க, முதலீட்டின் கால அளவு மற்றொரு முக்கியக் காரணியாகும். எவ்வளவு காலம் முதலீடு செய்தீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் பணம் வளர்ச்சி அடையும். இது ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது மிகவும் முக்கியமானது.
அதிக வருமானத்திற்கான சிறந்த SIP திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது:
அதிக வருமானத்திற்கான SIP சிறந்த திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அந்த வகை, கடந்தகால செயல்திறன் மற்றும் நிதி மேலாளரின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்வது அவசியம். உங்கள் இலக்குக்கான சிறந்த SIP திட்டத்தை எவ்வாறு தேர்வு செய்யலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
1. நீண்ட கால வளர்ச்சிக்கான ஈக்விட்டி நிதிகள்
அதிக SIP வருமானத்தை எதிர்பார்க்கும் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு, ஈக்விட்டி ஃபண்டுகள் சிறந்த வழி. இந்த நிதிகள் முதன்மையாக பங்குகளில் முதலீடு செய்கின்றன, காலப்போக்கில் வளர்ச்சி திறனை வழங்குகின்றன. ரிஸ்க்கைப் பொறுத்து, லார்ஜ் கேப், மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.
● லார்ஜ்-கேப் ஃபண்டுகள்: வலுவான சந்தை இருப்புடன் நன்கு இயங்கிவரும் நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள். அவை மிதமான ரிஸ்க்குடன் நிலையான வருமானத்தை வழங்குகின்றன.
● மிட்-கேப் ஃபண்டுகள்: அதிக வளர்ச்சி திறன் கொண்ட நடுத்தர அளவிலான நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள், ஆனால் லார்ஜ்-கேப் ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது இவற்றில் அதிக ரிஸ்க் இருக்கக்கூடும்.
● ஸ்மால்-கேப் ஃபண்டுகள்: அதிக வளர்ச்சித் திறன் கொண்ட சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யுங்கள். ஆனால் இதில் அதிக ஆபத்தும் உள்ளது. இந்த நிதிகள் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்யும் தீவிர முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.
எடுத்துக்காட்டாக, Axis Bluechip Fund, Mirae Asset Large Cap Fund மற்றும் HDFC ஸ்மால் Small Cap Fund ஆகியவை வரலாற்று ரீதியாக வலுவான நீண்ட கால வருமானத்தை வழங்கிய சில SIP நிதிகள் ஆகும்.
2. ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கான கடன் நிதிகள்
குறைவாக ரிஸ்க் எடுத்தால் போதும் எனக் கருதும் முதலீட்டாளர்களுக்கு அல்லது குறுகிய காலத்திற்கு தங்கள் பணத்தை முதலீடு செய்ய விரும்புவோருக்கு கடன் நிதிகள் பாதுகாப்பானவை. இந்த நிதிகள் அரசாங்கப் பத்திரங்கள், கார்ப்பரேட் பத்திரங்கள் மற்றும் பணச் சந்தை கருவிகள் போன்ற நிலையான வருமானப் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகின்றன. ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது கடன் நிதிகளிலிருந்து வரும் வருமானம் குறைவாக இருந்தாலும், அவை அதிக ஸ்திரத்தன்மை மற்றும் குறைந்த ஏற்ற இறக்கம் கொண்டவை. இந்தியாவில் HDFC Short Term Debt Fund மற்றும் SBI Magnum Medium Duration Fund ஆகியவை பிரபலமான கடன் நிதிகளாக உள்ளன.
3. சமச்சீர் வளர்ச்சிக்கான ஹைபிரிட் நிதிகள்
ஹைப்ரிட் ஃபண்டுகள் ஈக்விட்டி மற்றும் கடன் நிதியில் கலவையாக முதலீடு செய்கின்றன. வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இடையில் சமநிலையை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இவை சிறந்தவை. இவை பியூர் ஈக்விட்டி ஃபண்டுகளை விட குறைந்த அபாயத்துடன் மிதமான வருமானத்தை அளிக்கின்றன. ஒப்பீட்டளவில் ரிஸ்க் அதிகம் உள்ள ஹபிரிட் நிதிகள் ஈக்விட்டியில் முதலீடு செய்பவை. இவை நீண்ட கால இலக்குகளுக்கு ஏற்றவை. அதே சமயம் கடன் நிதியில் அதிகம் முதலீடு செய்யும் ஹைபிரிட் நிதிகள் நடுத்தர கால இலக்குகளுக்குப் பொருத்தமானவை.
Prudential Equity & Debt Fund, SBI Equity Hybrid Fund போன்ற ஹைப்ரிட் ஃபண்டுகள் சமநிலையான வளர்ச்சியை விரும்புவோருக்கு நல்ல சாய்ஸாக இருக்கும்.
இந்தியாவில் அதிக வருமானத்திற்கான சிறந்த SIP திட்டங்கள்
இந்தியாவில் SIP முதலீட்டில் அதிக வருமானத்தைக் கொடுக்கும் பிரபலமான சில SIP நிதிகள் இதோ:
1. Mirae Asset Large Cap Fund: ஒரு லார்ஜ்-கேப் ஈக்விட்டி ஃபண்ட், நீண்ட காலத்திற்கு தொடர்ந்து வலுவான வருமானத்தை அளித்துள்ளது.
2. Axis Bluechip Fund: நிரூபிக்கப்பட்ட வளர்ச்சியுடன் தரமான பங்குகளில் கவனம் செலுத்துவதால் முதலீட்டாளர்களிடையே புகழ்பெற்றது.
3. HDFC Small Cap Fund: தீவிர முதலீட்டாளர்களுக்கு அதிக வளர்ச்சி கொடுக்க சாத்தியமுள்ள ஸ்மால் கேப் ஈக்விட்டி ஃபண்ட் இது.
4. ICICI Prudential Equity & Debt Fund: வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இடையே சமநிலையை வழங்கும் ஹைபிரிட் வகை நிதி இது.
5. SBI Magnum Medium Duration Fund: குறைந்த ரிஸ்க் கொண்ட நிலையான வருமானத்தை வழங்கும் கடன் நிதி.
இந்த நிதிகள் நிலையான செயல்திறனைக் காட்டுகின்றன. நீண்ட கால நிதி இலக்குகளை அடைவதற்கான SIP திட்டங்களில் இவற்றில் சிலவற்றைத் தேர்வு செய்யலாம்.
மியூச்சுவல் ஃபண்டு அப்ளிகேஷன்களை பயன்படுத்துவதால் இன்றைய முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் சில முக்கியமான நன்மைகளைக் காணலாம்.
- சௌகரியம் மற்றும் சுலபம்: மியூச்சுவல் ஃபண்ட் செயலிகள், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் முதலீடுகளை நிர்வகிக்கும் வசதியை வழங்குகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க முடியும். உங்கள் போர்ட்ஃபோலியோவை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம்.
- பயனர்களுக்கு ஏற்ற வடிவமைப்பு: எளிமையாக வடிவமைக்கப்பட்ட இந்த ஆப்ஸ், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கும் மற்றும் புதிய பயனர்களுக்கும் எளிதான அமைப்பைக் கொண்டுள்ளன. நிதியைத் தேர்ந்தெடுப்பதில் இருந்து முதலீடு செய்வது வரை, நேரடியான செயல்முறையாக இருக்கும். எந்தத்த் தொந்தரவும் இருக்காது.
- லைவ் அப்டேட்ஸ்: மியூச்சுவல் ஃபண்ட் செயலிகள் லைவ் அப்டேட் மற்றும் அறிவிப்புகளை வழங்குகின்றன. சந்தைச் செய்திகள் மற்றும் போர்ட்ஃபோலியோ செயல்திறன் பற்றி உங்களுக்குத் தெரிவிக்கின்றன. சரியான நேரத்தில் கிடைக்கும் தகவல்கள் உங்கள் முதலீட்டு உத்தியைத் திறம்பட மாற்றி அமைக்க உதவுகின்றன.
- பேலன்ஸ் சரிபார்ப்பு: உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் இருப்பை விரைவாகச் சரிபார்க்கலாம். சமீபத்திய பரிவர்த்தனைகளைப் பார்க்கலாம். போர்ட்ஃபோலியோ செயல்திறனைக் கண்காணிக்கலாம். இதன் வெளிப்படைத்தன்மை பயனுள்ள நிதி திட்டமிடலுக்கு உதவுகிறது.
- விரிவான பகுப்பாய்வு: சிறந்த மியூச்சுவல் ஃபண்டு செயலிகளில் மேம்பட்ட பகுப்பாய்வு கருவிகள், விரிவான நிதி செயல்திறன் அறிக்கைகள் மற்றும் கடந்தகால தரவுகள் ஆகியவை வழங்கப்படும். இந்த விவரங்கள் நிபுணர் பரிந்துரைகளுடன், முதலீட்டுத் தேர்வுகளைச் செய்ய உதவுகின்றன.
- தடையற்ற பரிவர்த்தனைகள்: மியூச்சுவல் ஃபண்டு அப்ளிகேஷன் மூலம் நிதிகளை வாங்குவது, விற்பது அல்லது மாற்றுவது விரைவானது மற்றும் பாதுகாப்பானது. பரிவர்த்தனைகளின் எளிமை, சந்தை வாய்ப்புகளை உடனடியாகப் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைத் தருகிறது.
- பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மை: இரண்டு அடுக்கு அங்கீகரிப்பு அம்சம் கொண்ட வலுவான பாதுகாப்பு, மியூச்சுவல் ஃபண்டு செயலிகளில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளையும் தரவுகளையும் பாதுகாக்கின்றன. வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய விரிவான பதிவுகள் மற்றும் அறிக்கைகள் வழங்கப்படுகின்றன.
- பன்முக முதலீட்டு வாய்ப்புகள்: இந்த செயலிகள் கடன், ஈக்விட்டி, ஹைபிரிட் என பலவிதமான நிதிகளை வழங்குகின்றன. இது உங்கள் போர்ட்ஃபோலியோவை பலவகையில் மேம்படுத்தவும் நிதி இலக்குகள் மற்றும் ரிஸ்க்குகளை சீரமைக்கவும் பயனுள்ளது.
- கற்றல் வளங்கள் மற்றும் ஆதரவு: மியூச்சுவல் ஃபண்டு செயலிகளில் முதலீட்டிற்கு அப்பால், பயனுள்ள கட்டுரைகள், டுடோரியல்கள், வீடியோக்கள் போன்றவையும் இடம்பெறுகின்றன.
- நிதி சார்ந்த கருவிகளுடன் ஒருங்கிணைப்பு: பல மியூச்சுவல் ஃபண்ட் செயலிகள், வங்கி மற்றும் பட்ஜெட் செயலிகள் போன்ற நிதிக் கருவிகளுடன் ஒருங்கிணைந்து, நிதி மற்றும் நிர்வாகத்தை எளிமையாக்கும் விரிவான பார்வையைத் தருகின்றன.
முடிவுரை
உங்கள் நிதி இலக்குகளுக்கான சிறந்த SIP திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு, உங்கள் முதலீட்டு எல்லை, ரிஸ்க் அளவு மற்றும் தேவைகளுக்கு ஏற்ற நிதி வகை போன்ற காரணிகளை கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். ஈக்விட்டி ஃபண்டுகள் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டாலும், கடன் அல்லது ஹைப்ரிட் ஃபண்டுகள் மூலம் ஸ்திரத்தன்மையை நாடினாலும், நன்கு கட்டமைக்கப்பட்ட SIP முதலீட்டுத் திட்டம் உங்கள் இலக்குகளை அடைய உதவும்.
SIP கால்குலேட்டர் போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலமும், இந்தியாவின் பல்வேறு SIP நிதிளை ஆராய்வதன் மூலமும், நிதி இலக்குகளுடன் ஒத்துப்போகும், நீண்ட கால வளர்ச்சிக்கான முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கலாம். உருவாக்கிய திட்டத்தை அவ்வப்போது மதிப்பீடு செய்வதையும் நிதி நிலைமை அல்லது சந்தை நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் மாற்றங்கள் செய்வதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் முதலீட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புபவர்கள், பஜாஜ் ஃபின்சர்வ் செயலியைப் பதிவிறக்கம் செய்யுங்கள். இது முதலீடுகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல், முதலீட்டு அனுபவத்தை மேம்படுத்தும் விதமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களையும் கொண்டுள்ளது.