spicejet pilot:செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

Published : Sep 21, 2022, 09:38 AM IST
 spicejet pilot:செலவு குறைப்பாம்! 80 பைலட்களை 3 மாத விடுப்பில் வீட்டுக்கு அனுப்பிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனம்

சுருக்கம்

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக நடவடிக்கையாக 80 விமானிகளை ஊதியம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பியுள்ளது.

செலவுகளைக் குறைக்கும் நோக்கில் தற்காலிக நடவடிக்கையாக 80 விமானிகளை ஊதியம் இல்லாமல் 3 மாதம் கட்டாய விடுப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்பியுள்ளது.

இது தற்காலிகமான நடவடிக்கைதான், நிலைமை சீராகும்போது பணிக்கு அழைக்கப்படுவார்கள் என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி போயிங் மற்றும் பம்பார்டியர் விமானங்களை இயக்கும் 80 விமானிகள் கட்டாய விடுப்பில் 3 மாதங்களுக்கு அனுப்பி வைக்கபட்டனர். இவர்களுக்கு ஊதியமும் இல்லை, அடுத்து வேலை உறுதியாகுமா என்பதுகுறித்த நிரந்தரமும் இல்லை.

:ரயில் பயணிகளுக்கு ஐஆர்சிடிசியின் குட் நியூஸ்!நவராத்திரி விரதச் சாப்பாடு அறிமுகம்:விலை குறைவு

விமான எரிபொருள் விலை உயர்வு, சமீபகாலமாக சிறிய விபத்துக்களில் சிக்கியது என ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்துவந்த நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த பல காலாண்டுகளாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இழப்பில்தான் சென்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் “ நிறுவனத்தின் செலவுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் 80 விமானிகளுக்கு 3 மாதங்கள், ஊதியமில்லாமல் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோதிலும்கூட விமானநிறுவன ஊழியர் ஒருவரையும்  பணிநீக்கம் செய்யக் கூடாது என்று கொள்கையோடு இருந்தோம்.அதே கொள்கையோடுதான் நிர்வாக சீர்திருத்தங்களுக்காக நடவடிக்கை எடுத்துள்ளோம்.இந்த நடவடிக்கை தற்காலிகமானதுதான். 

அசுர வளர்ச்சியில் அதானி குழுமம்! பங்குச்சந்தையில் டாடா குழுமத்தையே பின்னுக்குத் தள்ளி சாதனை
ஆனால் ஊழியர்களுக்கான மற்ற சலுகைகளான காப்பீடு, விடுமுறை கால பயணம். மேக்ஸ் விமானங்கள் அதிகப்படுத்தப்பட்டபின் இந்த பைலட்கள் மீண்டும் பணிக்கு அழைக்கப்படுவார்கள்” ஆகியவற்றுக்கு தகுதியானவர்கள்.


ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் திடீர் நடவடிக்கை விமானிகளில் ஒரு தரப்பினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவர்களில் ஒருவர் கூறுகையில் “ ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் நிதிச்சிக்கலில் இருப்பது தெரிந்ததுதான். 


ஆனால், திடீரென இந்த முடிவை நிறுவனம் எடுத்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நிறுவனத்தின் நிதிச்சூழலும் உறுதியற்றதன்மையில் இருக்கிறது. விடுப்பில் அனுப்பிவைக்கப்பட்ட விமானிகளுக்கு மீண்டும் வேலைவழங்கப்படுமா என்பதும் உறுதியாகஇல்லை 

உலகப் பொருளாதார மந்தநிலை 2023ல் உருவாகலாம்: உலக வங்கி எச்சரிக்கை
கொரோனா பரவலுக்குப்பின், விமானிகளை கட்டாயவிடுப்பில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அனுப்புவது இதுதான் முதல்முறையாகும். கொரோனா காலத்தில் வெளிநாட்டு விமானிகள் நீக்கப்பட்டனர், விமானத்தில் பணியாற்றும் ஊழியர்களும் கட்டாய விடுப்பில் செல்லப்பட்டு ஊதியக் குறைப்பும் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?
வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?