one time use plastic ban: நாடுமுழுவதும் இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலானது: பட்டியல் விவரம்?

Published : Jun 29, 2022, 01:34 PM ISTUpdated : Jul 01, 2022, 10:45 AM IST
one time use plastic ban: நாடுமுழுவதும் இன்று முதல்   பிளாஸ்டிக் தடை அமலானது:  பட்டியல் விவரம்?

சுருக்கம்

one time use plastics items banned from july 1:சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறு சுழற்ச்சிக்கு வழியில்லாத ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ம்தேதி முதல் ஒட்டுமொத்த தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமயமாதல் ஆகியவற்றைத் தடுக்க, மறுசுழற்ச்சிக்கு வழியில்லாத ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ம்தேதி முதல் ஒட்டுமொத்த தடைவிதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தத் தடையால் பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் எந்த மாதிரி மாறப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது.

அஞ்சல் சேவைக்கும் வரி; மருத்துவமனை நோயாளி அறைக்கும் வரி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்

அதிகமான ஆபத்துகொண்ட, குறைந்த பயன்பாடு தன்மை கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதோ, தயாரிப்பதோ, இருப்பு வைப்பதோ, பயன்படுத்துவதோ தடை செய்யப்பட்டுள்ளது.

2022, ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் ஸ்ட்ரா உள்ளிட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்துக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் தடையால் பிளாஸ்டிக் பாட்டில்களில் குளிர்பானங்கள் அடைத்து விற்கும் நிறுவனங்கள் கடும் அதிருப்தியும், பதற்றமும் அடைந்துள்ளன.

தெர்மகூல் தயாரிக்கும் நிறுவனங்கள், கூட்டமைப்பு நிறுவனங்கள், குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், ஒட்டுமொத்த தடை விதிக்கக்கூடாது, தடையை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரி்க்கை விடுத்துள்ளன.

Reliance retail தலைவராகிறார் இஷா அம்பானி: ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி: பொறுப்பை ஒப்படைத்தார் முகேஷ் அம்பானி

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பூமிக்கும், கடல்சார் உயிரினங்களுக்கும் பெரும் கேடு விளைவிக்கும் என சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு தடை விதிக்கப்படுகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களால், அனைத்து நாடுகளின்சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைகிறது, பெரும் சாவாலாக உருவெடுத்துள்ளது.

2019ம் ஆண்டு ஐநாவின் சுற்றுச்சூழல் மாநாட்டில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தது. சர்வதேச சமூகம் உடனடியாக இதில் கவனம்  செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டது.

Form-16 என்றால் என்ன? அடிப்படைத் தகவல்கள்: கேள்விகளும் பதில்களும்

தடை செய்யப்பட்ட பொருட்கள் பட்டியல்

  • பிளாஸ்டிக் குச்சி கொண்ட இயர்பட்ஸ்
  • பலூன்களில் உள்ள பிளாஸ்டிக் குச்சி
  • பிளாஸ்டிக் கொடிகள்
  • மிட்டாய்கள்,லாலிபாப்களில் உள்ள பிளாஸ்டிக் குச்சி
  • பிளாஸ்டிக் ஐஸ்க்ரீம் ஸ்பூன்
  • அலங்காரத்துக்கான தெர்மகூல்
  • பிளாஸ்டிக் தட்டுகள்
  • பிளாஸ்டிக் கப்
  • பிளாஸ்டிக் டம்ளர்
  • பிளாஸ்டிக் கத்தி
  • பிளாஸ்டிக் ஸ்பூன்
  • பிளாஸ்டிக் ஸ்ட்ரா, 
  • பிளாஸ்டிக் ட்ரே
  • இனிப்புகளை பார்சல்செய்யப்படும் பேப்பர்கள்
  • பிளாஸ்டிக் அழைப்பிதழ்
  • பிளாஸ்டிக் சிகரெட் பாக்கெட்டுகள்
  • பிவிசி பேனர்கள்(100மைக்ரோன்களுக்கு குறைவு)

FD மூலம் அதிக வருவாய் வேணுமா? இந்த 4 விஷயத்தை மறக்காம செய்யுங்க, குபேரன் கொட்டுவாரு..

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்தச்சட்டத்தின்படி, 75 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரிபேக்கை உற்பத்தி செய்யவோ, இறக்குமதி செய்யவோ, இருப்பு வைக்கவோ, பகிர்ந்தளிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ தடை விதிக்கப்படுகிறது. 120 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக்குகளை விற்பதும் 2022, டிசம்பர் 31ம் தேதியுடன் தடை விதிக்கப்படுகிறது.

பிளாஸ்டிக் தடையை சிறப்பாக நடைமுறைப்படுத்த மத்திய அரசு ஆப்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது.மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட prakriti லட்சிணம் கடந்த ஏப்ரல் 5ம் தேதி மத்திய அரசு வெளியிட்டது.

இந்தத் தடையால் ப்ரூட்டி, ரியல், ட்ராப்பிகானா, மாஸா போன்ற குளிர்பானங்கள் எந்த மாதிரி மாறப் போகிறது என்பது கேள்வியாக இருக்கிறது. ப்ரூட்டி,ஆப்பே ஆகிய பானங்களை தயாரிக்கும் பார்லே நிறுவனம், பிளாஸ்டி தடைக்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கக் கோரியுள்ளது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?