isha ambani: Reliance retail தலைவராகிறார் இஷா அம்பானி: பொறுப்பை ஒப்படைத்தார் முகேஷ் அம்பானி

By Pothy Raj  |  First Published Jun 29, 2022, 12:12 PM IST

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தின் தலைவராக இஷா அம்பானி நியமிக்க ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளார்.


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்ட நிலையில், ரிலையன்ஸ் ரீடெயில் நிறுவனத்தின் தலைவராக இஷா அம்பானி நியமிக்க ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளார்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக ஜியோ, ரீடெயில் நிறுவனத்தை பின்புறத்திலிருந்து இயக்கப் போகிறார். தனது மகன் ஆகாஷ் அம்பானி, மகள் இஷா அம்பானி செயல்பாடுகளை பின்பக்கத்திலிருந்து திருத்துவது, ஆலோசனைகள் வழங்குவது ஆகியவற்றை அமபானி செய்ய உள்ளார். இவ்வாறு திரைமறைவில் இரு நிறுவனங்களையும் அம்பானி இயக்குவது  இதுதான் முதல்முறை

Tap to resize

Latest Videos

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று முன்தின்திடீரென பதவி விலகினார். அந்தப் பதவிக்கு தனது மகன் ஆகாஷ் அம்பானியை நியமித்தார். 

ரிலையன்ஸ் ஜியோ புதிய இயக்குநராக ஆகாஷ் அம்பானி: முகேஷ் அம்பானி திடீர் விலகல்

இது தொடர்பாக, பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தாக்கல் செய்த பைலிங்கில் “ ஜூன் 27ம் தேதி  நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அவரின்  தந்தை முகேஷ்அம்பானி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகாஷ் அம்பானி கடந்த சில ஆண்டுகளாக ஜியோவின் டிஜிட்டல் பிரிவில் பல்வேறு வகையான மாற்றங்களையும், மேம்பாட்டு, வளர்ச்சிப்பணிகளையும் நடத்தி வந்தார். குறிப்பா ஏஐ மற்றும் எம்எல் மற்றும் பிளாக்செயின் போன்றவற்றில் ஆகாஷ் அம்பானி தனி ஈடுபாடு காட்டினார். ஜியோ 4ஜி தொழில்நுட்பத்தைச் சுற்றி டிஜிட்டல் எகோ சிஸ்டத்தை உருவாக்குவதிலும் ஆகாஷ் அம்பானி மிகுந்த ஈடுபாடு காட்டினார். இதையடுத்து, ஆகாஷ் அம்பானியை ஜியோவின் அடுத்த இயக்குராக நிர்வாகக்குழு நியமித்துள்ளது.

பான்-ஆதாரை இணைச்சாச்சா!ஜூலை முதல் 2 மடங்கு அபராதம்: எவ்வாறு இணைப்பது, பரிசோதிப்பது?

இந்நிலையில் அடுத்த கட்டமாக, சில்லரைவர்த்தக நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெயிலுக்கு தலைவராக தனது மகள் இஷா அம்பானியை, நியமிக்க, முகேஷ் அம்பானி முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

ஒன்னு வெச்சா 2! ரெண்டு போட்டா 4: உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் அஞ்சலக திட்டம் தெரியுமா

தற்போது ரிலையன்ஸ் ரீடெயில் வென்சர்ஸ் இயக்குநராக இஷா அம்பானி இருந்து வருகிறார், அடுத்ததாக அவரை தலைவராக உயர்த்தப்பட உள்ளார். 30 வயதாகும் இஷா அம்பானி, யேழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!