மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு: நிர்மலா சீதாராமனை நெருக்கும் எதிர்க்கட்சிகள்

By Pothy RajFirst Published Jun 29, 2022, 10:49 AM IST
Highlights

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை மேலும் சில ஆண்டுகளுக்கு நீ்ட்டிக்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கு அளிக்கும் ஜிஎஸ்டி வரிவருவாய் பங்கு தொகையை உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் நெருக்கடி கொடுத்துள்ளன.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை மேலும் சில ஆண்டுகளுக்கு நீ்ட்டிக்க வேண்டும் அல்லது மாநிலங்களுக்கு அளிக்கும் ஜிஎஸ்டி வரிவருவாய் பங்கு தொகையை உயர்த்த வேண்டும் என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகள் நெருக்கடி கொடுத்துள்ளன.

google, Amazon வேண்டாம்! படிக்கும்போதே facebookக்கில் வேலை பெற்ற அங்கன்வாடி ஊழியர் மகன்

ஜிஎஸ்டி கவுன்சில் குழுக் கூட்டத்தின் 2-வது நாள் இன்று நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவது நீ்ட்டிப்பு கோரிக்கை எதிர்க்கட்சிகள் ஆளும் அரசுகளால் வலுவாக எழுப்பப்பட்டு வருகிறது

5 ஆண்டுகள் இழப்பீடு

 ஜிஎஸ்டி வரி கடந்த 2017ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் வரிவருவாய் இழப்பீட்டுக்கு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதாவது 2022, ஜூன் மாதம்வரை மாநிலங்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி இழப்பீடு தரும் எனக் கூறப்பட்டது.

அந்தவகையில் மத்திய அரசு இழப்பீடு தருவதாகக் கூறியக் காலக்கெடு இந்த ஜூன் மாதத்தோடு முடிகிறது. இதனால் ஜூலை மாதத்திலிருந்து மாநிலங்களுக்கு வரி இழப்பீடு மத்தியஅரசு வழங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு கிடுக்கிப்பிடி! 28 % வரியா?

எதிர்ககட்சிகள் கோரிக்கை

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டித்தால்தான் கொரோனா பரவல் காரணமாகவும், லாக்டவுன் காரணமாகவும் கடந்த2 ஆண்டுகளில் ஏற்பட்ட வரிவருவாய் பற்றாக்குறையை ஈடு செய்ய முடியும் என்று கோரிக்கை வைக்கின்றன. 

ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களில் சில, இழப்பீடு தேவையில்லை என்று கூறுகின்றன. ஆதலால், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் இன்றைய 2-வது நாள் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டத்திருத்தம் தேவை

அடுத்த சில ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு, ஒருவேளை ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புத் அளித்தாலும், அதற்கு நாடாளுமன்றத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் 101வது சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும். அது மழைக்காலக் கூட்டத்தொடரில்தான் திருத்தம் கொண்டுவந்து நிறைவேற்ற முடியும். 

அதேசமயம், இழப்பீடு வழங்க முடியாது என்று ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு எடுத்தால், மாநிலஅரசுகளின் வருவாய் மோசமாகப் பாதி்க்கப்படும். 

தங்கத்துக்கு இ-வே பில் கட்டாயமாக்கப்படுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

நிர்மலாவுக்கு கடிதம்

இந்நிலையில், சில மாநிலங்களின் நிதிஅமைச்சர்கள் மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளர். அதில் ஜிஎஸ்டி வரிவருவாய் பங்கீடு அளவை மாநிலங்களுக்கு உயர்த்தித் தர வேண்டும் அல்லது ஜிஎஸ்டி இழப்பீடு தருவதை சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கோரி நெருக்கடி கொடுத்துள்ளன.

சத்தீஸ்கர் மாநில நிதிஅமைச்சர் டிஎஸ் சிங் தியோ, நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில் “அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்களுக்கு வழங்கிட வேண்டும். மாநிலத்தில் சுரங்கம் மற்றும் உற்பத்தித்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்துக்கு 2018ல் ரூ.2786 கோடி, 2019ம் ஆண்டில் ரூ.3176 கோடி, 2020ம் ஆண்டில் ரூ.3620 கோடி, 2021ம் ஆண்டில் ரூ.4,127 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்தார்

உச்ச நீதிமன்ற தீர்ப்பு

காசையும் இழக்கணும் வரியும் கட்டணும்: 28%ஜிஎஸ்டி வரி செலுத்த தயாராக இருங்க?

மே.வங்க முதல்வரின் தலைமை ஆலோசகர் அமித் மித்ரா எழுதிய கடிதத்தில் “ உச்ச நீதிமன்றம் அளித்த அறிவுரையின்படி, ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு என்பது பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் இருக்கக்கூடாது, கருத்தொற்றுமை அடிப்படையில் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை நிர்மலா சீதாராமன் கருதுவார் என்று நம்புகிறோம். ஆதலால், ஜிஎஸ்டி இழப்பீட்டை நீட்டிக்க வேண்டும் இல்லாவிட்டால் வரிவருவாய் பங்கீட்டை அதிகப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

click me!