ரிலையன்ஸ் ஜியோ புதிய இயக்குநராக ஆகாஷ் அம்பானி: முகேஷ் அம்பானி திடீர் விலகல்

Published : Jun 28, 2022, 04:56 PM ISTUpdated : Jun 29, 2022, 09:58 AM IST
 ரிலையன்ஸ் ஜியோ  புதிய இயக்குநராக ஆகாஷ் அம்பானி:  முகேஷ் அம்பானி திடீர் விலகல்

சுருக்கம்

Reliance jio new chairman akash ambani: ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி இன்று பதவி விலகியுள்ளார். புதிய இயக்குநராக, தலைவராக அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

ரிலையன்ஸ் ஜியோ இயக்குநர் பதவியிலிருந்து முகேஷ் அம்பானி இன்று பதவி விலகியுள்ளார். புதிய இயக்குநராக, தலைவராக அவருடைய மகன் ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார்.

crypto: bitcoin: கிரிப்டோ சந்தையை பதறவைத்த சீன அறிவிப்பு: பிட்காயின் 70% மதிப்புச் சரிவால் சந்தையில் பீதி

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் பதவிவிலகல் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தாக்கல் செய்த பைலிங்கில் “ ஜூன் 27ம் தேதி  நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இதில் ரிலையன்ஸ் ஜியோ தலைவராக ஆகாஷ் அம்பானியை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது. அவரின்  தந்தை முகேஷ்அம்பானி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ளார். 

pan aadhaar linking: பான்-ஆதாரை இணைச்சாச்சா!ஜூலை முதல் 2 மடங்கு அபராதம்: எவ்வாறு இணைப்பது, பரிசோதிப்பது?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநராக பங்கஜ் மோகன் பவார் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இயக்குநர்களாக ராமந்திர் சிங் குஜ்ரால், கே.வி.சுவுத்ரி ஆகியோர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடக்க இருக்கும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் அடுத்த சிலமாதங்களில் 5ஜி நெட்வொர்க் சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது. அந்தநேரத்தில் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த வேண்டும், லாபத்தை உயர்த்த வேண்டும் என்பதால், திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு இன்று  ரூ.2,529 ஆக முடிந்தது.

google, Amazon வேண்டாம்! படிக்கும்போதே facebookக்கில் வேலை பெற்ற அங்கன்வாடி ஊழியர் மகன்

இந்தியத் தொலைத்தொடர்பு துறையில் முதலிடத்தில் இருக்கும் ஜியோவின் கடந்த நிதியாண்டி் கடைசிக்காலாண்டில் நிகர லாபம் ரூ.4,173 கோடியாகும். இதுக டந்த 3வது காலாண்டில் ரூ.3615 கோடியாகஇருந்தது. வருவாய் ரூ.20901 கோடியாக, கடந்த ஆண்டு இதே காலத்தைவிட, 20 சதவீதம் அதிகமாகும். கடந்த நிதியாண்டின் கடைசிக்காலாண்டில்  ரூ.17,538 கோடியாக வருவாய் இருந்தது

ஆகாஷ் அம்பானியை தலைவராக நியமிக்க காரணம் என்ன?

ஆகாஷ் அம்பானி கடந்த சில ஆண்டுகளாக ஜியோவின் டிஜிட்டல் பிரிவில் பல்வேறு வகையான மாற்றங்களையும், மேம்பாட்டு, வளர்ச்சிப்பணிகளையும் நடத்தி வந்தார். குறிப்பா ஏஐ மற்றும் எம்எல் மற்றும் பிளாக்செயின் போன்றவற்றில் ஆகாஷ் அம்பானி தனி ஈடுபாடு காட்டினார். ஜியோ 4ஜி தொழில்நுட்பத்தைச் சுற்றி டிஜிட்டல் எகோ சிஸ்டத்தை உருவாக்குவதிலும் ஆகாஷ் அம்பானி மிகுந்த ஈடுபாடு காட்டினார். இதையடுத்து, ஆகாஷ் அம்பானியை ஜியோவின் அடுத்த இயக்குராக நிர்வாகக்குழு நியமித்துள்ளது.

இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகமாக இருக்கும் நிலையில் ரிலையன்ஸ்ஜியோ நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானி நிலை

முகேஷ் அம்பானி தொடர்ந்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் தொடர்வார். அதுமட்டுமல்லாமல், ஜியோ டிஜிட்டல் சேவைக்கு அடித்தளமாக இருக்கும் ஜியோ பிளாட்ஃபார்முக்கும் தலைவராக முகேஷ் அம்பானி இருப்பார். கடந்தாண்டே சூசமாக சேர்மன் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது.

பங்குச்சந்தையில் கவனிப்பு

ரிலையன்ஸ் ஜியோவின் புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் புதன்கிழமை பங்குச்சந்தையில் ரிலையன்ஸ் பங்குகள் நிலை குறித்து முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பார்கள். புதன்கிழமை பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் பங்குகள் நிலை அதிகமாகக் கவனிக்கப்படும். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

அமெரிக்கா, சீனாவுக்கு இணையாக இந்தியா வளர 30 ஆண்டுகள் ஆகலாம்: ரகுராம் ராஜன்
IndiGo: 10,000 கார்கள், 9,500 ஹோட்டல் அறைகள், ரூ.827 கோடி ரீஃபண்ட்... மீண்டும் மீண்டு வந்த இண்டிகோ!