crypto: bitcoin: கிரிப்டோ சந்தையை பதறவைத்த சீன அறிவிப்பு: பிட்காயின் 70% மதிப்புச் சரிவால் சந்தையில் பீதி

By Pothy Raj  |  First Published Jun 28, 2022, 3:34 PM IST

Bitcoin price crash 70%: கிரிப்டோகரன்ஸிகளின் ராஜாவாக இருக்கும் பிட்காயின் மதிப்பு வரும் காலத்தில் 12ஆயிரம் டாலராகக் குறையும் என சீனவின் நாளேடு ஒன்று ஆய்வறிக்கையில் கூறியதால், கிரிப்டோ சந்தையில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.


கிரிப்டோகரன்ஸிகளின் ராஜாவாக இருக்கும் பிட்காயின் மதிப்பு வரும் காலத்தில் 12ஆயிரம் டாலராகக் குறையும் என சீனவின் நாளேடு ஒன்று ஆய்வறிக்கையில் கூறியதால், கிரிப்டோ சந்தையில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

பான்-ஆதாரை இணைச்சாச்சா!ஜூலை முதல் 2 மடங்கு அபராதம்: எவ்வாறு இணைப்பது, பரிசோதிப்பது?

Tap to resize

Latest Videos

பிட்காயின் மதிப்பு கடந்த வாரத்தில் மோசமாகச்சரிந்த நிலையில் கடந்த 3 நாட்கள்தான் ஓரளவுக்கு உயர்ந்து வருகிறது. ஆனால், இந்த நிலை நீடிக்காது மோசமான வீழ்ச்சியைச் சந்திக்கும் என சீன அரசின் எக்கானமிக் டெய்லி எச்சரித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு பிட்காயின் 69ஆயிரம் டாலராக இருந்தநிலையில் அதிலிருந்து தற்போது 70 சதவீதம் மதிப்பை பிட்காயின் இழந்துள்ளது. 

அமெரிக்காவில் நிலவும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை கடந்தஇரு வாரங்களுக்கு முன் 75  புள்ளிகள் உயர்த்தியது. இதனால் பிட்காயினில் முதலீடு செய்தவர்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பு தேவை என்பதால் அதிலிருந்து முதலீட்டை எடுத்து அமெரிக்க வங்கிகளிலும், பங்கு பத்திரங்கள், கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்வது அதிகரித்து வருகிறது. 

 கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உலகளவில் கிரிப்டோ சந்தையின் மதிப்பு 2.70 லட்சம் கோடி டாலராக இருந்தது. ஆனால், தற்போது 70 சதவீதம் சரி்ந்து 90,000 கோடி டாலராகக் குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் கிரிப்டோவிலிருந்து 10.20 கோடி டாலர் வெளியேறியுள்ளது.

டாடா குழுமத்தின் முக்கியப் பங்குதாரர் தொழிலதிபர் பலூன்ஜி மிஸ்திரி காலமானார்: பிரதமர் மோடி இரங்கல்

உலகளவில் கிரிப்டோகரன்ஸி சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் மட்டும் 10 சதவீதம் சரிந்து 90 ஆயிரம் கோடி டாலராகக் குறைந்தது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரிப்டோகரன்ஸி மதிப்பு 26 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கிரிப்டோசந்தையின் மதிப்பு ஒருலட்சம் கோடி டாலர் குறைந்துள்ளது

பிட்கியான் மதிப்பு தொடர்ந்து 12வது வாரமாகச் சரிந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் ஒருபிட் காயின் மதிப்பு 49ஆயிரம் டாலராக இருந்த நிலையில் தற்போது 21 ஆயிரம் டாலராகச் சரிந்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு நவம்பரில் பிட்காயின் மதிப்பு 68ஆயிரம் டாலராக உயர்ந்ததுதான் உச்சபட்சமாகும். அதன்பின் இப்போதுவரை பிட்காயின் மதிப்பு 60 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பிட்காயின் மதிப்பு 14 ஆயிரம் டாலராகக் குறையும் என ஆய்வுகள் தெரிவித்தன

இதே கருத்தைத்தான் சீன அரசின் சார்பில் வெளியாகும் எக்கனாமிக் டெய்லி நாளேடும் தெரிவித்துள்ளது. பிட்காயின் மிதிப்பு சரிவிலிருந்து உயர்வது போன்று தெரியும் ஆனால், அது செயற்கையானது. ஆனால், விரைவில் மோசமான வீழச்சியைச் சந்தித்து 12ஆயிரம் டாலராகக் குறையும். அதேபோல எத்திரியம் காயின் மதிப்பும் 80% வீழ்ச்சியைச் சந்திக்கும் என எச்சரித்துள்ளது.

GST Council 47th meeting Today: கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு கிடுக்கிப்பிடி! 28 % வரியா?

அமெரிக்காவின் கோல்டுமேன்சாஸ் வங்கியின் ஆலோசகர் வில்லியம்நான்ஸ் ப்ளூம்பெர்க் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ கிரிப்டோ சந்தையில் பிட்காயின் மதிப்பு 70 சதவீதம் சரிந்துவிட்டது இது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் முகமதிப்பையும் பிட்காயின் இழந்து வருகிறது. இதனால் தற்போது பிட்காயினுக்கு எதிராகநாங்கள் பரிமாற்றம் செய்வதையும் மறுபரிசீலனை செய்ய இருக்கிறோம். பிட்காயின் நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இருக்கும் முக்கியமான பிட்காயின் பரிமாற்ற வங்கியான காயின்பேஸ் நிறுவனமும் பிட்காயின், எத்திரியம் போன்றவற்றின் மதிப்பு வீழ்ச்சியைஉன்னிப்பாக கவனித்து வருகிறது. பிட்காயின் மதிப்புச் சரிவைப் பார்த்து புதிய வாடிக்கையாளர்கள் முதலீடு செய்வது தொடர்ந்து குறைந்துவருகிறது எனத் தெரிவித்துள்ளது.

click me!