
ஆன்-லைன் சில்லரை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், சிறிய நிறுவனங்கள் கட்டாயமாக ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டும் என்பதிலிருந்து ஜிஎஸ்டி கவுன்சில் விலக்கு அளிக்கலாம் எனத் தெரிகிறது.
GST Council 47th meeting Today: கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு கிடுக்கிப்பிடி! 28 % வரியா?
47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்றும், நாளையும் சண்டிகரில் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறி்ப்பாக ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தை ஊக்கப்படுத்தும் வகையில், ஜிஎஸ்டியில் கட்டாயமாக பதிவு செய்வது என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம், அதற்குப் பதிலாக காம்போசிஷன் திட்டத்தில் சேர்வதற்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
ஆன்லைன் சில்லரை வர்த்தகத்தில் ரூ.40 லட்சம்வரை ஆண்டுக்கு விற்றுமுதல் உள்ளவர்கள் ஜிஎஸ்டியிலிருந்து பதிவு செய்யும் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம்.
அதேபோல, ஆன்லைன் நிறுவனங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் ரூ.1.50 கோடிவரை விற்றுமுதல் இருக்கும் நிறுவனங்கள் காம்போசிஷன் வரிவிதிப்பை தேர்ந்தெடுக்கலாம். அதாவது நிறுவனங்களுக்கு வரி செலுத்துவதற்கு எது வசதியாக, எளிமையாக இருக்கிறதோ அதை தேர்வு செய்யலாம்.
6 மாதங்களுக்குப்பின் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: என்னென்ன விவாதிக்கப்படும்? விரிவான பார்வை
தற்போதுள்ள விதிப்படி மின்னணு வர்த்தக தளங்களுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்கள் கண்டிப்பாக ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டும். விற்றுமுதல் ரூ.20 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும் என்று இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சில்லரை வர்த்தகம், சிறு வணிகம் ஆகியவற்றை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும், டிஜிட்டல் முறையை புகுத்தவும் ஜிஎஸ்டி சட்டத்தில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவர ஜிஎஸ்டி சட்டக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்த திருத்தங்கள் மூலம் புதிதாக வேலைவாய்ப்பு உருவாகும், கிராமப்புறங்கள், பகுதிநகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பு உருவாகும்.
gst council: காத்திருக்கும் எதிர்க்கட்சிகள்: மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிக்கப்படுமா?
கொரோனா தொற்றுக்குப்பின் ஆன்லைன் வர்த்தகத்தின் நிலை தீவிரமடைந்துள்ளதால், வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள், அரசுத் துறைகள் ஆகியவற்றிலிருந்து பல்வேறு ஆலோசனைகளை ஜிஎஸ்டி செயலகம் பெற்றுள்ளது.
அந்த ஆலோசனையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களுக்கு கண்டிப்பாக ஜிஎஸ்டியில் பதிவுசெய்யவதிலிருந்து விலக்கு அளி்க்க வேண்டும். அதிலும் அவர்களின் ஆண்டு விற்றுமுதல் அடிப்படையாக வைத்து ஆன்லைன் விற்பனையாளர்கள், ஆஃப்லைன் விற்பனையாளர்கள் இடையே சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.