ஆபரணத் தங்கம் விலை சவரணுக்கு ரூ.256 குறைந்தது: சென்னையில் 10 நாட்களில் இல்லாத விலை சரிவு: வெள்ளி வீழ்ச்சி

Published : Jun 29, 2022, 10:25 AM ISTUpdated : Jun 29, 2022, 10:30 AM IST
ஆபரணத் தங்கம் விலை சவரணுக்கு ரூ.256 குறைந்தது:  சென்னையில் 10 நாட்களில் இல்லாத விலை சரிவு: வெள்ளி வீழ்ச்சி

சுருக்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது.  சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 32 ரூபாயும், சரணுக்கு 256 ரூபாயும் குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று திடீரென சரிந்துள்ளது.  சென்னையில் இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 32 ரூபாயும், சரணுக்கு 256 ரூபாயும் குறைந்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ புதிய இயக்குநராக ஆகாஷ் அம்பானி: முகேஷ் அம்பானி திடீர் விலகல்

தங்கத்தின் விலை கடும் ஏற்ற, இறக்கத்துடன் கடந்த ஒருவாரமாக இருந்து வரும் நிலையில் சவரணுக்கு ரூ.250 குறைந்தது கடந்த 15 நாட்களில் இதுதான் முதல்முறையாகும்.

  சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,765க்கும், சவரண் ரூ.38,120க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 குறைந்து ரூ.4,733 ஆகவும், சவரணுக்கு, ரூ. 256 குறைந்து, ரூ.37 ஆயிரத்து864க்கும் விற்பனையாகிறது. 

கிரிப்டோ சந்தையை பதறவைத்த சீன அறிவிப்பு: பிட்காயின் 70% மதிப்புச் சரிவால் சந்தையில் பீதி

கடந்த 20ம் தேதி முதல் தங்கத்தின் விலை அதிகபட்சமாக ரூ.38ஆயிரத்து 200 தாண்டவில்லை, அதேநேரம் இரு முறை சவரண் ரூ.37ஆயிரத்தைத் தொட்டாலும் ரூ.37,960க்கு கீழ் செல்லவில்லை. ஆனால், கடந்த 10 நாட்களில் முதல்முறையாக சவரணுக்குரூ.256 குறைந்துள்ளது. 

கடந்த 17ம் தேதிமுதல் இதுவரை தங்க நகை சவரண் ரூ.38ஆயிரத்தைக் கடந்து 10 முறை வந்துள்ளது. ரூ.38ஆயிரத்துக்கு கீழ் இரு முறை சென்றுள்ளது. தங்கத்தின் விலையில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல், ரூ.80 அளவில் மட்டுமே விலை ஏறவும், இறங்கவும் இருந்தது. ஆனால், சவரணுக்கு ரூ.256 குறைந்தது முக்கியமானது.

2030ம் ஆண்டில் ஒப்பந்த தொழிலாளர்கள் இ்ந்தியாவில் 200% அதிகரிப்பார்கள்: நிதிஆயோக் தகவல்

 ரஷ்யாவுக்கு எதிராக தங்கம் இறக்குமதிக்கு ஜி7 நாடுகள் தடை விதித்திப்பதால், தங்கத்தின் விலை உயரக்கூடும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்திருந்தார். ஏனென்றால்,உலகின் தங்க உற்பத்தியில் 10 சதவீதம் ரஷ்யாவில் நடக்கிறது, ஆண்டுக்கு 350 டன் தங்கத்தை ரஷ்யா ஏற்றுமதி செய்து வருகிறது. ரஷ்யா தங்கம் வருகை சந்தையில் தடைபடும்போது தங்கம் விலை உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், விலை குறைந்து வருகிறது.

தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.256 குறைந்துள்ளதால், முதலீடு செய்ய இது ஏற்ற தருணம் என்று தங்க நகை வியாபாரிகளும், சந்தை வல்லுநர்களும் தெரிவிக்கிறார்கள்.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1.30 காசுகள் குறைந்து, ரூ.65.30க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிலோ ரூ.65,3000 எனக் குறைந்துள்ளது.
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!