அஞ்சல் சேவைக்கும் வரி; மருத்துவமனை நோயாளி அறைக்கும் வரி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்

By Pothy Raj  |  First Published Jun 29, 2022, 11:37 AM IST

அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் தபால்கள், பார்சல்களுக்கும் , மருத்துவமனையில் நோயாளிகள் அறைக்கும் வரிவிதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


அஞ்சலகம் மூலம் அனுப்பப்படும் தபால்கள், பார்சல்களுக்கும் , மருத்துவமனையில் நோயாளிகள் அறைக்கும் வரிவிதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு: நிர்மலா சீதாராமனை நெருக்கும் எதிர்க்கட்சிகள்

Tap to resize

Latest Videos

47-வது ஜிஎஸ்டி கவுன்சிலின் 2நாள் கூட்டம் சண்டிகரில் நடந்து வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். 

ஜிஎஸ்டி வரிவீதத்தை மாற்றி அமைத்தல், சில பொருட்களுக்கு விலக்கு அளித்தல், வரி அடுக்கை மாற்றுதல் ஆகியவற்றை ஆய்வு செய்ய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் மாநில நிதிஅமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டிருந்தது.
அந்த அமைச்சர்கள் குழு தனது அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் தலைவர் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தாக்கல் செய்துள்ளது. அந்தக் குழு ஏராளமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

ஜிஎஸ்டி பதிவு செய்வதிலிருந்து சிறிய ஆன்-லைன் நிறுவனங்களுக்கு விலக்கு?

கேசினோஸ், குதிரைப்பந்தயம், ஆன்லைன் கேம் ஆகியவற்றுக்கு 28சதவீதம் வரி விதிக்கப்படுவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படும். கிரிப்டோகரன்ஸிக்கு வரி விதிக்கப்படுவது குறித்தும் இன்று ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. 
அதில் முக்கியமானது, “ தங்கத்தை ஒரு மாநிலத்துக்குள் கொண்டு செல்லும்போது இ-வே பில் விதிக்கப்படுவது குறித்து அந்தந்த மாநிலங்களை முடிவு செய்து ரசீது வழங்கலாம். 

ஹோட்டல்கள், ரெஸ்டாரண்ட்களில் தினசரி ரூ.1000க்கு குறைவான வாடகை வசூலிக்கும்அறைகளுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதற்கு 12 சதவீதம்வரி விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆதலால் இனிமேல் ரூ.1000க்கும் குறைவான வாடகை உள்ள அறைக்கும் 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி வரும்.

மருத்துவமனைகளில் ஐசியு அறை தவிர்த்து நோயாளிகளுக்கான தினசரி ரூ.5ஆயிரம் வாடகை விதிக்கப்படும் அறைக்கு, 5% ஜிஎஸ்டிவரி விதிக்கப்பட பரிந்துரைத்துள்ளது.

அஞ்சலகங்களில் போஸ்ட்கார்டு, இன்லான்ட்லெட்டர், புக்போஸ்ட், என்வலெப் ஆகியவை 10 கிராமுக்கு குறைவாக இருந்தால் ஜிஎஸ்டிவரி விதிக்கத் தேவையில்லை. ஆனால், காசோலை, வேறு வகையான புத்தக பார்சல் ஆகியவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும்

கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு கிடுக்கிப்பிடி! 28 % வரியா?

குடியிருப்புகளை குடியிருப்பு தேவைக்காக வாடகைக்கு விடும் வர்த்தக நிறுவனங்களுக்கு  அளிக்கப்பட்ட வரிவிலக்கை ரத்து செய்ய வேண்டும்.

பாக்கெட்டில் விற்கப்படும் தயிர், கோதுமை மாவு உள்ளிட்டவற்றுக்கு 5% ஜிஎஸ்டி வரி, சமையல் எண்ணெய், சோலார்வாட்டர் ஹீட்டர், நிலக்கரி, எல்இடி விளக்கு ஆகியவற்றுக்கு வரிவிதிப்பை மாற்றி அமைக்க வேண்டும்.அமைச்சர்கள் குழுவின் இந்தப்ப ரிந்துரைக்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

click me!