ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: எந்தெந்தப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கும்; வரி குறைக்கப்படும்?

By Pothy Raj  |  First Published Jun 29, 2022, 12:41 PM IST

47th gst council meeting: 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  சண்டிகரில் நடந்து வரும் நிலையில், எந்தெந்தப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கும்,எந்தெந்தப் பொருட்களுக்கு வரி குறைக்கப்படலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்  சண்டிகரில் நடந்து வரும் நிலையில், எந்தெந்தப் பொருட்களுக்கான வரி அதிகரிக்கும்,எந்தெந்தப் பொருட்களுக்கு வரி குறைக்கப்படலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 6 மாதங்களுக்குப்பின் முதல்முறையாக ஜிஎஸ்டிகவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது.இதில்  வரிவிதிப்பில் ஏராளமான மாற்றங்கள்  வரலாம் எனத் தெரிகிறது. வரிவிதிப்பை ஒழுங்கபடுத்தவும், புதிய விரிகள் விதிக்கவும், விலக்கு அளிக்கவும் வரி சீர்திருத்த பரிந்துரைக் குழு நியமிக்கப்பட்டது. கர்நாடக முதல்வர் பொம்மை தலைமையில் மாநில நிதிஅமைச்சர்கள் குழு நியமிக்கப்பட்டது. 

Latest Videos

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு: நிர்மலா சீதாராமனை நெருக்கும் எதிர்க்கட்சிகள்

இந்த குழு ஏராளமான பொருட்களுக்கு வரிவீதத்தை உயர்த்தியும், குறைத்தும். 215 பொருட்களுக்கு வரியை மாற்றமலும் ஜிஎஸ்டி் கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.அது குறித்த விவரம் வருமாறு.

வரி குறைக்கப்பட வாய்ப்புள்ள பொருட்கள்

1.    மருத்துவ அறுவை சிகிச்சைக்கான அஸ்டானமி உபகரணங்களுக்கு 12 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது, இது 5 சதவீதமாகக் குறைக்கப்படலாம்.

2.    எலும்பு சிசிகிச்சைக்கான உபகரணங்கள், பொருட்களுக்கு தற்போது 5 முதல் 12 சதவீதம் ஜிஎஸ்டிவரிவிதிக்கப்படுகிறது.இது 5 சதவீதமாகசீராக விதிக்கப்படலாம்

3.    நப்பா கற்கள், டைல்ஸ்களுக்கு 5 முதல் 18 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது.இது சீராக 5 சவீதமாக மாற்றப்படலாம்.

4.    பருப்பு வகைகளின் உப பொருட்களான சில்கா, காந்தா, சூரிஉள்ளிட்ட பொருட்களுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம்

அஞ்சல் சேவைக்கும் வரி; மருத்துவமனை நோயாளி அறைக்கும் வரி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்

5.    இந்திய ராணுவத்தின் தேவைக்காக வெளிநாடுகளில் இருந்து தனியார் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு அடிப்படை சுங்கவரியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியும்விலக்கு அளிக்கப்படலாம்.

6.    கழிவுநீரிலிருந்து சுத்திகரித்து எடுக்கப்படும் நீருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது,அதற்கு வரி முற்றிலும் நீக்கப்பட்டு விலக்கு அளிக்கப்படலாம்.

7.    பேட்டரி வாகனங்கள், இ-ஸ்கூட்டர் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி குறித்த தெளிவான விளக்கம், 5 சதவீதம் வரிவிதிப்பு மட்டும்தானா என்பது தெளிவுபடுத்தப்படும்.

8.    ரோப் கார்களுக்கும், அதன் சேவைக்கும் 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, அது 5சதவீதமாகக் குறைக்கப்படலாம்.

ரிலையன்ஸ் ஜியோ புதிய இயக்குநராக ஆகாஷ் அம்பானி: முகேஷ் அம்பானி திடீர் விலகல்

வரி உயர்த்தப்பட வாய்ப்புள்ள பொருட்கள்

1.    டெட்ரா பேக்கிங், அதற்கான பேக்கேஜிங் பேப்பர்களுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 18சதவீதமாகஉயர்த்தப்படலாம்.

2.    பாலிஷ் செய்யப்பட்ட வைரங்கள், செதுக்கப்பட்ட வைரங்களுக்கு தற்போது 0.25 சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது, அது 1.5 சதவீதமாக உயர்த்தப்படலாம்.

3.    ஐஸ்க்ரீம் பார்லர்களுக்கு தற்போது 5முதல் 18சதவீதம் வரிவிதிக்கப்படுகிறது, அது சீராக 18% உயர்த்தப்படலாம்.

4. முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட மீன், தயிர், பனீர், உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீதம் வரி 

5.பள்ளிக் குழந்தைகளுக்கான மேப், அட்லஸ் மேப் ஆகியவ்ற்றுக்கு 12% வரி

6. ரூஆயிரத்துக்கு குறைவான வாடகை பெறும் ஹோட்டல் ரூம்களுக்கு 12% வரி. முன் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

Reliance retail தலைவராகிறார் இஷா அம்பானி: ஜியோ தலைவர் ஆகாஷ் அம்பானி: பொறுப்பை ஒப்படைத்தார் முகேஷ் அம்பானி
வரிமாற வாய்ப்பு இல்லாதப் பொருட்கள்

1.    பழரசங்கள், ஊறுகாய், சட்னி, சாஸ்-ஆகியவற்றுக்கு 12% வரி தொடரும்

2.    உடனடி சாப்பிடும்பொருட்கள், உடனடிசாப்பிடும்வகையில் சமைக்கப்பட்ட உணவுகள், இன்ஸ்டன்ட் உணவுக் கலவைக்கு 18% வரி தொடரலா்

3.    பிராண்டட் ஸ்நாக்ஸ் 12% வரி தொடரலாம்

4.    மருத்துவ உபரகணங்கள் 12% வரி

5.    வீடுகளில் மேற்கூரைகள், மாடிகளில்அமைக்கப்படும் சோலார் திட்டங்கள், டிசிஆர் மாடல்களுக்கு 12% வரி

GST Council 47th meeting Today: கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு கிடுக்கிப்பிடி! 28 % வரியா?

6.    மாட்டிறைச்சி, எலும்பு, இறைச்சிதொடர்பான பொருட்கள், கோயா,பன்னீர், மசாலாப் பொருட்கள், சமையல் எண்ணெய் ஆகியவற்றுக்கான வரி மாறாது

7.    இ-ரிக்ஸாக்களுக்கான டயர்,டியூப்களுக்கு வரி மாற்றமில்லை

8.    ஹீட்டிங், வென்டிலேஷன், ஏசிகளுக்கு 28% வரி விதிப்பு மாறாது

9.    மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் டேப்ளட், லேப்டாப், டெஸ்க்டாப் கணனி உள்ளிட்டவற்றில் மாற்றமில்லை

10.    கற்கள், நகைகளுக்கு 3 சதவீதம் வரி

11.    இறக்குமதி செய்யப்படும் தங்கம் 3 %வரி

2030ம் ஆண்டில் ஒப்பந்த தொழிலாளர்கள் இ்ந்தியாவில் 200% அதிகரிப்பார்கள்: நிதிஆயோக் தகவல்

12.    பேருந்துகளில் பயன்படும் சிஎன்ஜி, சிஎன்ஜி கிட்ஸ் 28% வரி

13.    பேட்டரி வாகனங்களுக்கான உதரிபாகங்களுக்கு மாற்றமில்லை

14.    மார்பிள், கிரனைட், செராமிக் டைல்ஸ், சானிடரிபொருட்களுக்கு 18% வரி

15.    வாயுஏற்பட்ட குளிர்பானங்கள், பழரசங்களுக்கு 28+12 சதவீதம் செஸ் விதிக்கப்படும்.

16.    ஹெலிகாப்டர் மற்றும் விமானங்களுக்கான உதிரி பாகங்கள்

gst council: காசையும் இழக்கணும் வரியும் கட்டணும்: 28%ஜிஎஸ்டி வரி செலுத்த தயாராக இருங்க?

17.    விமான எரிபொருட்களுக்கு 18% வரி

18.    பால் பொருட்களுக்கான நெய், வெண்ணெய், ருசிஏற்றப்பட்ட பால் 12% வரி

19.    கோவிட் மருந்துகள், குறிப்பாக இடோலிஜுமாப் ஆகியவற்றில் மாற்றமில்லை

20.    வாசனையில்லாத புகையிலைப் பொருட்கள், பீடி, சிகெரட்டுக்கு வரிவிதிப்பில் மாற்றமில்லை


 

click me!