
மும்பை பங்குச்சந்தையும், தேசியப் பங்குசந்தையும் தொடர்ந்து 2வது நாளாக வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
கடந்த 12 நாட்கள் வர்த்தகத்தில் 11 நாட்கள் ஏற்றத்துடன் பயணித்த பங்குச்சந்தை நேற்று சரிந்த நிலையில் முடிந்தது. அந்த வீழ்ச்சி இன்று காலை வர்த்தகம் தொடங்கியபின்பும் தொடர்ந்து வருகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தியது:இந்திய சந்தையில் பாதிப்பு ஏற்படுமா?
மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ், 54 புள்ளிகள் குறைந்து, 60,851 புள்ளிகளில் வர்த்தகம் சரிந்த நிலையில் தொடங்கியது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 18 புள்ளிகள் குறைந்து, 18,064 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனப் பங்குகளில் 8 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. மற்ற 22 நிறுவனப் பங்குகள் மதிப்பும் சரிந்துள்ளன.
டைட்டன், ஐடிசி, பார்தி ஏர்டெல், மாருதி, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ்பைனான்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தில் உள்ளன. மற்றவை டெக் மகிந்திரா, இன்போசிஸ்,டாடா ஸ்டீல், ஹெச்டிஎப்சி ட்வின்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா உள்ளிட்ட பங்குகள் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளன.
எளிமையாகிறது ஐடிஆர் படிவம்: வருமானவரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரி படிவம்
என்ன காரணம்
அமெரிக்க பெடரல் வங்கி, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு வட்டி வீதத்தை தொடர்ந்து 4வது முறையாக 75 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதனால் இந்தியச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேறலாம் என்பதால், முதலீட்டாளர்கள் கவனத்துடனே வர்த்தகத்தை தொடங்கியுள்ளனர். இதனால் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் இல்லாமல் இருப்பதால் வர்த்கம் சரிந்தநிலையில் இருக்கிறது
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்:15% அதிகம்
இது தவிர இந்திய ரிசர்வ் வங்கியும் நிதிக்கொள்கைக் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது. இந்தக் கூட்டத்தில் வட்டிவீதத்தை உயர்த்துமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால், வட்டிவீதத்தை உயர்த்துமா என்று எதிர்பார்ப்பும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் இருந்து விலகியே உள்ளனர்.
பெடரல் வங்கியின் முடிவு, ஆர்பிஐ அறிவிப்பு ஆகியவை இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தை முடிவு செய்யும் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.