அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அந்நாட்டு பெடரல் வங்கி 4வது முறையாக கடனுக்கான வட்டி வீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தி நேற்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் நிலவும் கடுமையான பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, அந்நாட்டு பெடரல் வங்கி 4வது முறையாக கடனுக்கான வட்டி வீதத்தை 75 புள்ளிகள் உயர்த்தி நேற்று அறிவித்துள்ளது.
ஆனால், இந்த முறையோடு வட்டிவீதத்தை உயர்த்துவதை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்காவில் கடனுக்கான வட்டி வீதம் 3.75 சதவீதம் முதல் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் 10 ஆண்டுகள் வரை வெளிநாட்டு பயணிகள் தங்கலாம்! புதிய சலுகை அறிவிப்பு
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கிக்கு இருக்கும் முக்கியக் கருவிகளில் ஒன்று வட்டி வீதத்தை உயர்த்துவது. ஆனால், வட்டிவீதத்தை உயர்த்தும்போது, பொருளாதாரத்தில் தேவையின் அளவு பாதிக்கப்படும், பொருளாதார வளர்ச்சி வேகம் குறையும்.
அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்தவாரே இருக்கிறது.இதுவரை 3 முறை வட்டிவீதத்தை பெடரல் வங்கி உயர்த்தியபோதிலும் பணவீக்கம் பெரிதாகக் குறையவில்லை. பொருளாதாரத்தில் சப்ளையும், தேவையும் சமநிலையற்றே காணப்படுகிறது. உணவுப் பொருட்கள் விலை அதிகரிப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு போன்றவை பணவீக்கத்தை குறையவிடாமல் செய்கின்றன.
இபிஎஸ்-95 சந்தாதாரர்களுக்கு நிம்மதி! இபிஎப்ஓ புதிய அறிவிப்பு
அமெரிக்க பெடரல் வங்கி வெளியிட்ட அறிக்கையில் “ உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் பொருளாதாரத்திலும், மனிதர்களுக்கும் கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. போர் காரணமாக பொருளாதாரத்தில் பணவீக்கத்தின் மீதான அழுத்தம் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி குறைகிறது. பணவீக்கத்தை குறைக்கும் முயற்சியில் பெடரல் வங்கி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பணவீக்கத்தை 2 சதவீதத்துக்குள் கட்டப்படுத்த தேவையான நடவடிக்கையை தொடர்ந்து எடுத்து வருகிறோம். வட்டிவீத உயர்வால் பணவீக்கம் குறையும் என நம்புகிறோம். பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம், பொருளாதார சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக வட்டிவீதம் உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
பொருளாதார சூழல்களை தொடர்ந்து பெடரல் வங்கி கண்காணித்து அதற்கு ஏற்றார்போல் நிதிக்கொள்கையை மாற்றி அமைக்கும்” எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்:15% அதிகம்
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்க பணவீக்கம் 8.3 சதவீதமாக இருந்தநிலையில், செப்டம்பரில் 8.2 சதவீதமாக மட்டுமே குறைந்திருந்தது. இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த முறையும் 75 புள்ளிகளை பெடரல் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
அமெரிக்கப் பொருளாதாரம் 2022, ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 2.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த இரு காலாண்டுகளாக மைனஸில் இருந்த பொருளாதாரம் இப்போது வளர்ச்சியை நோக்கி நகர்கிறது குறிப்பிடத்தக்கது
அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் இந்தியாவில் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை சரிவில் முடிந்தன. கடந்த 4 நாட்களாக ஏற்றத்தில் சென்ற வர்த்தகம் நேற்று வீழ்ச்சி அடைந்தது.
அமெரிக்க பெடரல் வங்கி வட்டியை உயர்த்தியதால், இந்தியச் சந்தையில் முதலீடு செய்துள்ள அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது இனி அதிகரிக்கலாம். இதனால், பங்குச்சந்தையில் ஊசலாட்டம் காணப்படும், அதுமட்டுமல்லாமல் டாலர் மதிப்பு வலுப்பெறும். ரூபாய் மதிப்பு மேலும் சரிவைச் சந்திக்க நேரிடும். இது பங்குச்சந்தையில் பெரிய வீழ்ச்சிக்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.