Share Market Today: பங்குச்சந்தையில் கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி: காரணம் என்ன?

By Pothy RajFirst Published Nov 2, 2022, 5:07 PM IST
Highlights

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 4 நாட்கள் உயர்வுக்குப்பின் இன்று சரிந்தன. 

மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 4 நாட்கள் உயர்வுக்குப்பின் இன்று சரிந்தன. 

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சர்வதேச சூழல் காரணமாக மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 67 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 10 புள்ளிகள் சரிந்தன நிலையில் வர்த்தகத்தை தொடங்கின.

ஆனால், பங்குச்சந்தையில் காலையில் காணப்பட்ட சரிவு மாலை வரை தொடர்ந்தது. மாலை வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 215 புள்ளிகள் சரிந்து, 60,906 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது, நிப்டியில் 62 புள்ளிகள் குறைந்து,  18,082 புள்ளிகளில் நிலைபெற்றது.

எளிமையாகிறது ஐடிஆர் படிவம்: வருமானவரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரி படிவம்

அமெரிக்க பெடரல் வங்கி இன்று கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கிறது. அமெரிக்க பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், வட்டிவீதம் 75 புள்ளிகள் வரை உயர்த்தப்படலாம் என்ற தகவல் வெளியானது. அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்பட்டால் அந்நிய முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேறுவார்கள், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரியும் என்ற அச்சம் இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை.

அதுமட்டுமல்லாமல் ரிசர்வ் வங்கியும் நிதிக்கொள்கைக் குழுக்கூட்டத்தை நாளை கூட்ட உள்ளது. அதிகரித்துவரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடிவடிக்கை குறித்து ஆலோசிக்க இருப்பதாலும் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்தனர்.

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்:15% அதிகம்

நிப்டியில் பங்குச்சந்தையில் பார்திஏர்டெல், அப்பலோ மருத்துவமனை, மாருதி சுஸூகி, எய்சர் மோட்டார்ஸ், பிரிட்டானியா இன்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் அதிக இழப்பைச் சந்தித்தன. ஹின்டால்கோ, சன் பார்மா, ஐடிசி, ஓஎன்சிஜி, டெக் மகிந்திரா பங்குகள் லாபத்தை அடைந்தன.

வங்கி, ஆட்டோமொபைல், தகவல் தொழில்நுட்பம், பொதுத்துறை வங்கிப் பங்குகள் அதிகமாக விற்கப்பட்டன. உலோகம், மருந்துத்துறை பங்குகள் லாபமடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் ஐடி, ஆட்டோமொபைல், ரியல்எஸ்டேட், எரிசக்தி பங்குகள் சரிவில் முடிந்தன, சுகாதாரத்துறை, உலோகம் பங்குகள் லாபமடைந்தன. 

சரிவுடன் தொடங்கிய பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிப்டி வீழ்ச்சி: காரணம் என்ன?

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய பங்குகளில் பார்தி ஏர்டெல், ஹெச்சிஎல், இந்துஸ்தான் யூனிலீவர், ஆக்சிஸ்வங்கி, நெஸ்ட்லே இந்தியா ஆகிய துறை பங்குகள் சரிவில் முடிந்தன. ஐடிசி, சன்பார்மா நிறுவனப் பங்குகள் அதிக லாபம் ஈட்டின

click me!