Common ITR Form: எளிமையாகிறது ஐடிஆர் படிவம்: வருமானவரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரி படிவம்

By Pothy RajFirst Published Nov 2, 2022, 3:04 PM IST
Highlights

வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஐடிஆர்(ITR Form) படிவத்தை கொண்டுவர மத்திய நிதிஅமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த படிவத்தில் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் வருமானம் ஈட்டினால்கூட தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரியான ஐடிஆர்(ITR Form) படிவத்தை கொண்டுவர மத்திய நிதிஅமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த படிவத்தில் டிஜிட்டல் சொத்துக்கள் மூலம் வருமானம் ஈட்டினால்கூட தெரிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் தவிர, அனைத்து வருமானவரி செலுத்துவோர்களும் இந்த புதிய வருமானவரி ரிட்டன் படிவத்தின் மூலம் ரிட்டன் தாக்கல் செய்ய முடியும். இது தொடர்பாக வருமானவரி செலுத்துவோர் தங்கள் கருத்துக்களை டிசம்பர் 15ம் தேதிக்குள் மத்திய நேர்முக வரிகள் வாரியத்தின் இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

தற்போது வருமான வரி செலுத்துவோருக்கு 7 வகையான ரிட்டன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஐடிஆர் படிவம்1(சஹாஜ்), ஐடிஆர் படிவம்4(சுகம்) ஆகியவை சிறிய மற்றும் நடுத்தர வரி செலுத்துவோருக்குரியதாகும். வாடகை வீடு, மாத வருமானம், வட்டி மூலம் ரூ.50 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் சஹாஜ் படிவத்தின் மூலம் வருமானவரி ரிட்டன் தாக்கல் செய்யலாம். 

தனிநபர்கள், இந்து பிரிக்கப்படாத குடும்பத்தினர், ரூ.50 லட்சத்துக்கள் வருமானம் ஈட்டும் நிறுவனங்கள், தொழில்கள், சுயதொழில்கள் மூலம் ரூ.50 லட்சத்துக்குள் வருமானம் ஈட்டுவோர் ஐடிஆர்-4 படிவத்தின் கீழ் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யலாம்.

அசையா சொத்துக்கள் மூலம் வருமானம் ஈட்டுவோர் ஐடிஆர்-2 படிவத்திலும், தொழில்கள், சுயதொழில்கள் மூலம் வருமானம் பெறுவோர் ஐடிஆர்-3 படிவத்திலும், ஐடிஆர்படிவம்-7 அறக்கட்டளைகளுக்கும், ஐடிஆர்5 மற்றும் 6 படிவம் எல்எல்பி மற்றும் வர்த்தகத்துக்கும் பொருந்தும்.

itr filing date: ஐடி ரிட்டன் செய்வோர் கவனத்துக்கு! தவிர்க்க வேண்டிய தவறுகள்: கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தற்போது நடைமுறையில் இருக்கும் ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்4படிவமும் தொடரும் அதிலும் வருமானவரி ரிட்டன் செலுத்தலாம். அதேநேரம், பொதுவான ஐடிஆர் படிவமும் கொண்டுவரப்படும். இரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம் என சிபிடிடி தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் “ ஐடிஆர்-7 படிவத்தை மட்டும் தவிர்த்து அனைத்துவிதமான வருமானவரி ரிட்டன்  படிவங்களையும் ஒருங்கிணைத்து பொதுவான ஐடிஆர் படிவத்தை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நகை, பணம் எவ்வளவு வெச்சுருக்கலாம்? வருமானவரித் துறையிடம் சிக்காமல் இருக்க இதைப்படிங்க

வரைவு ஐடிஆர் படிவத்தின் நோக்கம் என்பது தனிநபர்கள் வருமானவரி ரிட்டனை எளிதாகத் தாக்கல் செய்து, நேரத்தை மிச்சப்படுத்துவதாகும். வருமானவரி செலுத்துவோர் தங்களுக்கு எந்த அட்டவணை பொருந்தும் என்று தேடத் தேவையில்லை. பொதுவான ஐடிஆர் படிவத்தில் தங்களுக்குரிய விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து எளிமையாகத் தாக்கல் செய்யலாம். 

டிஜி்ட்டல் சொத்துக்கள், கிரிப்டோ சொத்துக்கள், வெளிநாட்டு நிறுவனங்களில் பங்குகள் மூலம் வருமானம், கடன்பத்திரங்கள் மூலம் ஏதேனும் வருமானம் ஈட்டினால், அதையும் குறிப்பிட தனியாக புதியபடிவத்தில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்:15% அதிகம்

இந்த புதியபடிவத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் வர்த்தகம், வருமானம், இந்தியாவில் உள்ள சொத்துக்கள், வர்த்தகத் தொடர்பு ஆகியவற்றை குறிப்பிடுகிறது. பல்வேறு வகையிலான ஏற்படும் வருமான இழப்புகளை மனதில் கொண்டு புதிய ஐடிஆர் படிவம் வடிவமைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

click me!