WhatsApp Update: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்:15% அதிகம்

By Pothy Raj  |  First Published Nov 2, 2022, 10:58 AM IST

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப்(WhatsApp) கணக்குகளை முடக்கி மெட்டா(Meta) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதத்தில் 26 லட்சம் வாட்ஸ்அப்(Whatsapp) கணக்குகளை முடக்கி மெட்டா(Meta) நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

மத்திய அரசின் புதிய தகவல்தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, இந்த அதிரடியான நடவடிக்கைகளை மெட்டாவின் வாட்ஸ்அப் நிறுவனம் எடுத்து வருகிறது.

Latest Videos

undefined

WhatsApp Update: இனி உங்களுக்கு நீங்களே மெசேஜ் அனுப்பலாம்!

இந்தியாவில் மட்டும் 50 கோடிபேர் வாட்ஸ்அப் கணக்குகளை வைத்துள்ளனர். இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு 666 புகார்கள் வந்துள்ளன, இதில் 23 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் விடுத்த அறிக்கையில் “ மத்திய அரசின் 2021, தகவல்தொழில்நுட்ப விதிகள்படி, 2022, செப்டம்பர் மாத பயனாளிகள் பாதுகாப்பு அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். பயனாளிகள் பாதுகாப்பு விவரங்கள், புகார்களைப் பெற்று, அதற்கு ஏற்றார்போல் நடவடிக்கை எடுத்துள்ளோம், தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறோம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் 26.85 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளோம்.

உங்க போன்ல சவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க

கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு பிரிவிலும், புள்ளிவிவரங்கள் பிரிவு, புள்ளிவிவர அறிவியல் பிரிவிலும் தொடர்ந்து முதலீடு செய்து, பாதுகாப்பான தளமாக மாற்றி வருகிறோம். எங்கள் சமூக வலைத்தளத்தில் எந்தவிதமான, யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் செய்திகள், புகைப்படங்களை பகிரும் தளமாக இருப்பதில் கவனம் செலுத்தி வருகிறோம். ” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 23 லட்சம் கணக்குகளை இந்தியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் முடக்கியது. இதில் 8.72 லட்சம் கணக்குகள் என்பது பயனாளிகள் தடை செய்யுங்கள் என்று கூறுவதற்கு முன்பே நாங்களே தடை செய்துவிட்டோம்.

அடடே! WhatsApp-ல் இப்படி கூட வீடியோ அனுப்ப முடியுமா!!

2021, தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, 50 லட்சம் சந்தாதாரர்கள் வைத்திருக்கும் சமூகவலைத்தள நிறுவனங்கள் மாதந்தோறும் புகார் அறிக்கை, குறைதீர்ப்பு அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் செப்டம்பர் மாத அறிக்கையை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதம் முடக்கப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளைவிட கூடுதலாக 15 சதவீதம் செப்டம்பர் மாதத்தில் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!