தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது.
தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய நிலையிலேயே நீடிக்கிறது.
சென்னையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி, இருந்த கிராம் ரூ.4,730 ஆகவும், சவரன், ரூ.37,840 என்ற நிலையிலேயே இன்று(புதன்கிழமை) காலையும் நீடிக்கிறது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,730க்கு விற்கப்படுகிறது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..
தங்கம் விலை தீபாவளிக்குப்பின் அதிகரித்து சவரன் ரூ.38ஆயிரத்துக்கு மேல் உயர்ந்தாலும் அதன்பின் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. திங்கள், செவ்வாய்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாயும், சவரனுக்கு ரூ.200 அதிகரதித்தது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த நிலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது.
கடந்த வாரத்தில் மட்டும் கடைசி 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது. இந்த வாரம் தொடங்கிய 2 நாட்களில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.
தங்கம் விலை தொடர் வீழ்ச்சி! 3 நாட்களில் சவரனுக்கு ரூ.480 சரிவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
அமெரிக்க பெடரல் வங்கி இன்று வட்டிவீதம் குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. அமெரிக்க பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 75 புள்ளிகள் வரை வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்று தெரிகிறது.
அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்படும் பட்சத்தில், தங்கத்தின் மீதான முதலீடு குறையலாம். டாலரின் மதிப்பு வலுவடையும்போது, அனைத்து நாடுகளின் கரன்சிகளும் நெருக்கடிக்கு உள்ளாகி, மதிப்புக் குறைவைச் சந்திக்கும். அப்போது இயல்பாகவே தங்கத்தின் மீதான முதலீடு குறையும்போது, தேவையும் குறையும். அதனால், அடுத்துவரும் நாட்களில் தங்கத்தின் விலையில் மாற்றம் வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை 2வது நாளாகச் சரிவு! 2நாட்களில் 240ரூபாய் குறைவு: இன்றைய விலை நிலவரம் என்ன?
வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.64.50 ஆகவும், கிலோவுக்கு ரூ.500 உயர்ந்து ரூ.64,500 ஆகவும் விற்கப்படுகிறது