
மும்பைப் பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை இன்று காலை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.
கடந்த 12 நாட்கள் வர்த்தகத்தில் 11 நாட்கள் உயர்வுடன் முடிந்தநிலையில் சர்வதேச சூழல் காரணமாக காலை முதலே பங்குச்சந்தையில் ஊசலாட்டம் காணப்படுகிறது.
வாரத்தின் 2வது நாளான நேற்று மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 375 புள்ளிகளும், தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 133 புள்ளிகளுடன் உயர்ந்த நிலையில் வர்த்தகத்தை முடித்தன. கடந்த 12 நாட்கள் வர்த்தகத்தில் பங்குச்சந்தையில் 3,886 புள்ளிகள் ஏற்றம் கண்டது, ஏறக்குறைய 7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை அதிரடி குறைப்பு.. எவ்வளவு கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..!
இந்நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சர்வதேச சூழல் காரணமாக மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியுள்ளது. மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 67 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 61,064 புள்ளிகளிலும், தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி10 புள்ளிகள் சரிந்து, 18,135 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன.
இன்று முக்கிய நிறுவனங்களின் 2ம் காலாண்டு முடிவுகள் வெளியாக இருப்பதால் முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் இருந்து கவனமாக கையாள்கின்றனர். குறிப்பாக அதானி டிரான்ஸ்மிஷன், டால்மியா பாரத், மகிந்திரா ஹாலிடேஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வர உள்ளன.
ஏறுமுகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!
மும்பை பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களில் 17 நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன, 13 நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்துள்ளன. டாடா ஸ்டீல், லார்சன் அன்ட் டூப்ரோ, ஐடிசி, ஹெச்சிஎல் டெக், ஐசிஐசிஐ வங்கி, கோடக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, சன் பார்மா, ஹெச்டிஎப்சி வங்கி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.
மாறாக, மகிந்திரா அன்ட் மகிந்திரா, ரிலையன்ஸ், டிசிஎஸ், ஹெச்டிஎப்சி,மாருதி, ஏசியன்ஸ் பெயின்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மதிப்பு குறைந்துள்ளன. தேசியப் பங்குசந்தையில் ஆட்டமொபைல், தகவல்தொழில்நுட்பம் ஆகிய துறை பங்குகள் சரிவில் உள்ளன. மற்ற துறைப் பங்குகள் ஏற்றத்தை நோக்கி நகர்ந்து வருகின்றன.
சிக்கனம் கஞ்சத்தனம் அல்ல!அக்.31 உலக சேமிப்பு நாள்: சேமிப்பின் அவசியம், முக்கியம் என்ன?
சரிவுக்கு காரணம் என்ன
அமெரிக்க பெடரல் வங்கி இன்று கடனுக்கான வட்டி வீதத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது. அந்த அறிவிப்பில் 75 புள்ளிகள் வட்டிவீதம் உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் ஆசியப் பங்குச்சந்தையிலும் சரிவு காணப்பட்டது அதன் எதிரொலி இந்தியச்சந்தையிலும் காலை நேர வர்த்தகத்தில் இருந்து வருகிறது. ஆனால், நேரம் செல்லச் செல்ல வர்த்தகம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம், ஏற்றத்தை நோக்கியும் நகரலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.