சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.
சென்னையில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.116 குறைந்து ரூ.1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருந்தன. அதேபோல வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்தது. இதனால், ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் வைத்துள்ளவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இதனிடையே, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ள நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து குறைத்து வருகின்றனர். அதன் படி சென்னையில் சென்னையில் ரூ.2009ஆக இருந்த சிலிண்டர் விலை ரூ.1,893 ஆகச் சரிந்துள்ளது. இதனால் வர்த்தகரீதியான சிலிண்டர்களை வாங்கி பயன்படுத்தும் சிறிய ஹோட்டல்கள், உணவகங்கள், தேநீர் கடைகள் போன்றவற்றுக்கு பெரிய நிம்மதி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து 6-வது மாதமாக வர்த்தகரீதியான சமையல் சிலிண்டர் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. விலையிலும் எந்த மாற்றமும் இல்லை.