இந்தோனேசியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், 5 முதல் 10 ஆண்டுகள் வரை தங்கும் விசாவை அந்நாட்டு அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தோனேசியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், 5 முதல் 10 ஆண்டுகள் வரை தங்கும் விசாவை அந்நாட்டு அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் 1.30 லட்சம் டாலர்கள் இருப்பு வைத்திருந்தால் போதும் இந்த சுலுகையைப் பெற முடியும். இந்த அளவு டாலர் கைவசம் வைத்திருக்கும் பயணிகள் 5 முதல் 10 ஆண்டுகள்வரை இந்தோனேசியாவில் தங்கலாம் அல்லது பணியாற்றவும் முடியும்.
undefined
இபிஎஸ்-95 சந்தாதாரர்களுக்கு நிம்மதி! இபிஎப்ஓ புதிய அறிவிப்பு
இந்தபுதிய சலுகை டிசம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் என்று ப்ளூம்பர்க் செய்தி தெரிவிக்கிஅறது. குடியேற்றத்துறை இயக்குநர் விடோடோ காத்ஜாஜனா கூறுகையில் “ இந்த புதிய கொள்கையின் நோக்கம் அதிகமான சுற்றுலாப் பயணிகளை பாலித் தீவுக்கு ஈர்ப்பதுதான்.
இந்த திட்டத்தால் அதிகமான வெளிநாட்டுப் பயணிகள் இந்தோனேசியாவுக்கு வருவார்கள் என நம்புகிறோம். இந்த திட்டம் மூலம் வெளிநாட்டுப் பயணிகள் 5 முதல் 10 ஆண்டுகள் வரை தங்க முடியும். இணையதளம் மூலம் ஹோம்விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.
எளிமையாகிறது ஐடிஆர் படிவம்: வருமானவரி செலுத்துவோர் அனைவருக்கும் ஒரே மாதிரி படிவம்
அவ்வாறு ஹோம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் பயணிகள் கீழ்கண்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.
1. பாஸ்போர்ட்(குறைந்தபட்சம் 36 மாதங்கள் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும்)
2. வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் இருப்பு வைத்தமைக்கான ஆதாரங்கள் அதாவது, குறைந்தபட்சம் 200 கோடி ருபாயை அல்லது ஈடான 1.30 லட்சம் டாலர்கள் வைத்திருப்பதற்கான ஆதாரங்கள்
3. சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். அது 4 செமீ உயரமும், 6செ.மீ அகலமும் இருக்கவேண்டும்.
4. விண்ணப்பிப்பவரின் பயோ-டேட்டா அனுப்ப வேண்டும்.
தங்கம் விலையில் என்ன மாற்றம்? இன்றைய நிலவரம் என்ன?
கடந்த வாரம் தாய்லாந்து வெளிநாட்டு பயணிகளுக்கு ஒரு சலுகையை அறிவித்தது. இதன்படி வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டில், நிலம்,வீடு வாங்கலாம் என அறிவித்தது. இந்த திட்டத்தின்படி தாய்லாந்து பொருளாதாரத்தை வளர்க்கவும், வெளிநாட்டு கோடீஸ்வரர்களை தங்கள் நாட்டில் முதலீடு செய்யத் தூண்டவும் இந்த முயற்சியை எடுத்தது.