
சர்வதேச காரணிகள் சாதகமாக இல்லாததையடுத்து, மும்பை பங்குச்சந்தை, தேசியப் பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கின.
அமெரிக்கப் பங்குச்சந்தை
அமெரிக்காவில் முதல்காலாண்டு முடிவுகள் நேற்று வெளியானதால் பெரும்பாலான பங்குகள் விலை சரிந்தன. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத சரிவை நேற்றை காலாண்டு சந்தித்தது. நாஷ்டாக் 1.54% சரிந்தது. இந்த பாதிப்பின் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும், ஐரோப்பிய பங்குச்சந்தையிலும் இருந்தது. ஆசியப்பங்குச்சந்தைகளில் நிக்கி1.29%, டாபிக்ஸ் 1.2% சதவீதமும் சரிந்தன.
இது தவிர அமெரிக்கா தன்னிடம் இருக்கும் கச்சா எண்ணெய் இருப்பை வெளியேற்றி விலைவாசியைக் குறைக்கும் என்று அதிபர் ஜோ பிடன் தெரிவித்தார். இதையடுத்து, அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராகச் சரிந்தது.
நடப்புக்கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பு
இந்தியாவின் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை 2021,அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் 2300 கோடி டாலராக அதிகரித்தது. இது ஜூலை- செப்டம்பர் மாதங்களில் 9900 கோடி டாலராக இருந்தது. இதுதவிர மாதக்கடைசி புதிய நிதியாண்டு தொடக்கம் என்பதால் முதலீட்டாளர்கள் கவனத்துடன் முதலீடு செய்ய நினைக்கிறார்கள். இதனால் காலையில் பங்குச்சந்தை ஊசலாட்டத்துடனே தொடங்கியது.
சரிவுடன் வர்த்தகம்
மும்பைப் பங்குச்சந்தையில் காலை வர்த்தகம் 35 புள்ளிகள் சரிந்து, 58,533 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது, தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி10 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து 17,454 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
லாபம்
30 முக்கிய பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 13 பங்குகள் லாபத்திலும், 17 பங்குகள் சரிவை நோக்கியும் வர்த்தகம் நடக்கிறது.
ஹீரோமோட்டார்ஸ், எஸ்பிஐ காப்பீடு, இன்போசிஸ், எய்சர்மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி பங்குகள் சரிவில் உள்ளன. என்டிபிசி, பவர்கிரிட், பார்தி ஏர்டெல், ஓன்ஜிசி, பிபிசிஎல்,டாடா ஸ்டீல், ஐடிசி, கோடக் வங்கி, மகிந்திரா அன்ட் மகிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன.
நிப்பிடியில் உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மின்சக்தி ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்திலும் தகவல்தொழில்நுட்பத்துறை பங்குகள் சரிவிலும் உள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.