cash circulation: மார்ச் மாதத்தில் பணப்புழக்கம் திடீர் அதிகரிப்பு ஏன் ? ரிசர்வ் வங்கி விளக்கம்

Published : Mar 31, 2022, 05:31 PM IST
cash circulation: மார்ச் மாதத்தில் பணப்புழக்கம் திடீர் அதிகரிப்பு ஏன் ? ரிசர்வ் வங்கி விளக்கம்

சுருக்கம்

cash circulation:நாட்டின் நிதிமுறையில் டிஜிட்டல் பரிமாற்றம் உயர்ந்திருந்தபோதிலும் மார்ச் 18ம் தேதிவரை பணப்புழக்கம் 9.2 சதவீதம் அதிகரித்து ரூ.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

நாட்டின் நிதிமுறையில் டிஜிட்டல் பரிமாற்றம் உயர்ந்திருந்தபோதிலும் மார்ச் 18ம் தேதிவரை பணப்புழக்கம் 9.2 சதவீதம் அதிகரித்து ரூ.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

ரொக்கப்பரிமாற்றம்

ஆனால், கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் ரூ.28.50 லட்சம் கோடியாகத்தான் இருந்தது. 2020ம் ஆண்டு மார்ச்சில் ஏடிஎம்களில் பணம் எடுத்த அளவு ரூ.2 கோடியே 51 லட்சத்து 75 ஆயிரம். அது 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.2 கோடியே 62 லட்சத்து,539 கோடியாக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன

2020ம் ஆண்டு மார்ச் மாதம் நாட்டில் பணப்புழக்கம் 30 லட்சத்து 80ஆயிரத்து356 கோடியாக இருந்தது. இது 2021ம் ஆண்டு மார்ச் மாதம், ரூ28லட்சத்து 53 ஆயிரத்து 763 கோடியாக இருந்தது. 2022, மார்ச் மாதம் பணப்புழக்கம் ரூ.30 லட்சத்து 92ஆயிரத்து 827 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் பணமதிப்பிழப்பை மத்திய அரசு கொண்டுவந்து டிஜிட்டல் பரிமாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் இன்னும் 65 சதவீத மக்கள் ரொக்கப்பணப்பரிமாற்றத்தையே நம்பியுள்ளனர். 

மக்கள் ஆர்வம்

ஏஜிஎஸ் டிராஸ்சிட் டெக்னாலஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்டான்லி ஜான்ஸன் கூறுகையில் “ 2022, மார்ச் 11ம் தேதி நிலவரப்படி நாட்டில் ரொக்கப்பணப்புழக்கம் ரூ.30.11 லட்சம் கோடியாக இருந்தது என்பது மக்கள் ரொக்கத்தின்மீதுதான் ஆர்வமாக இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் ஏடிஎம்களில் பணம் அதிகமாக எடுப்பதுதான் பணப்புழக்கம் அதிகரிப்புக்கு காரணம். 

நாட்டில் ஏடிஎம்கள் அதிகரிப்பும் பணப்புழக்கம் அதிகரிப்புக்கு காரணம். 2020ம் ஆண்டில் 2.34 லட்சம் ஏடிஎம் மையங்கள்இருந்தது, 2022ம் ஆண்டில் 2.51 லட்சம் ஏடிஎம் மையங்களாக உயர்ந்துவிட்டன. 2020ம் ஆண்டு மார்ச்சில் 2.71 லட்சம் மைக்ரோ ஏடிஎம்கள் இருநத்து, 2022ம் ஆண்டு மார்ச்சில் 6.40 லட்சம் மைக்ரோ ஏடிஎம்களாக அதிகரித்துவிட்டன.

டிஜிட்டல் பரிமாற்றம்

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பணப்புழக்கத்தைக் குறைத்து டிஜிட்டல் பரிமாற்றத்தை அதிகரிக்க முயல்கின்றன. ஆனால், கொரோனா பரவல் குறைந்துகட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டபின் பொருளாதாரம் சூடுபிடித்துள்ளது. மக்கள் டிஜிட்டல் பரிமாற்றத்தைவிட ரொக்கப்பரிமாற்றத்துக்கே முன்னுரிமை அளிக்கிறார்கள். சிறிய மற்றும் வழக்கமான செலவுகளுக்கு ரொக்கப்பரிமாற்றமேசிறந்தது என மக்கள் நினைக்கிறார்கள்.

சில்லரை வணிகர்களும் டிஜிட்டல் பரிமாற்றத்தைவிட ரொக்கத்தையே விரும்புகிறார்கள். இந்தப் போக்கு காலப்போக்கில் மாறும். மக்கள் டிஜிட்டல் பரிமாற்றத்தைவிட ரொக்கப்பரிமாற்றத்தையே இன்னும் விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்

டிஜிட்டலும் அதிகரிப்பு

2021-22ம் ஆண்டில் 7,422 கோடி டிஜிட்டல் பரிமாற்றங்கள் நடந்துள்ளன. இது 2020-21ம் ஆண்டில் 5,554 டிஜிட்டல் பரிமாற்றங்கள் மட்டுமே நடந்திருந்தன. 2022ம் ஆண்டு பிப்ரவரி வரை 452 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன, இதன் மதிப்பு, ரூ.8.27 லட்சம் கோடியாகும். 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 207 சதவீதம் வளர்ச்சி கண்ட டிஜிட்டல் பரிமாற்றம், 2021 செப்டம்பரில் 304% இருந்தது.

2022 மார்ச் 29ம் தேதிநிலவரப்படி 504 கோடி பரிமாற்றங்கள் நடந்துள்ளன, இதன் மூலம் ரூ.83.45 கோடி பரிமாற்றம் நடந்துள்ளது. இதில் பாதியளவு யுபிஐ பரிமாற்றம் என்பது ரூ.200க்கும் குறைவாகவே நடந்துள்ளது. அதாவது சராசரியாக 200ரூபாய்க்குள்மட்டுமே பரிமாற்றம் நடக்கிறது. ஆனால் 100 ரூபாய்க்கு குறைவாக பெரும்பாலும் ரொக்கப்பரிமாற்றமே நடக்கிறது.  டிஜிட்டல் பரிமாற்றம் அதிகரி்த்தபோதிலும்கூட மக்கள் ரொக்கப்பரிமாற்றத்தை அதிகமாக விரும்புகிறார்கள்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Govt Training: காளான் விதை தயாரித்து மாதம் ரூ.50,000 வரை சம்பாதிக்க அரிய வாய்ப்பு.! ஒருநாள் பயிற்சி உங்களுக்குத்தான்.!
SBI to Hire: ஸ்டேட் பேங்கில் செம்ம வேலை வாய்ப்பு... ஒவ்வொரு காலாண்டுக்கும் 16000 பேருக்கு வேலை..! 300 புதிய கிளை திறக்கப்படும்.!